Ad Widget

தெல்லிப்பழை தமிழ்ச் சங்கத்தின் தமிழ் விழா!

தெல்லிப்பழை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரிமா கழக மண்டபத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.சிவானந்தராசா தலைமையில் தமிழ் விழா இடம் பெற்றது.

தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் இடப மாடுகள் இரண்டு முன்னே வர அதனைத் தொடர்ந்து சங்கு, தப்பட்டை, பேரிகை, மேள வாத்தியங்ள் முழங்க கொடி, ஆலவட்டம் தாங்கி தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளான கரகாட்டம், குதிரையாட்டம் மற்றும் வீர விளையாட்டுக்களில் ஒன்றான கம்பு சுற்றி விருந்தினர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் கொடியை தலைவர் ஏற்றி வைக்க விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

சைவ, கிறிஸ்தவ வழிபாடுகளை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு சங்கத்தின் செயலாளர் திருமதி கணேசதுரை பகீரதியினால் வரவேற்புரை நிகழத்தப்பட்டது.

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சேதமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சரிய சுவாமிகள், மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சுந்தரேஸ்வரக்குருக்கள் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் போதகர் அருட்திரு இராஜ்குமார் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை எ.ஜே.ஜேசுதாசன் அடிகளார் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.

வாழ்த்துரையை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் வழங்கினார். தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியரும் ஆராய்சியாளருமான பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும் சிற்ப்புரையை அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜூம் நிகழத்தினர். இந்நிகழ்வில் மூத்த கலைஞர்களும் கெளாரவிக்கப்பட்டனர். அத்துடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

5

6

7

8

Related Posts