கமலேந்திரனின் பிணை நிபந்தனையில் தளர்வு

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நின்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி க.சிவபாதசுந்தரம் வியாழக்கிழமை (26) அனுமதியளித்துள்ளார். அத்துடன் மாதத்தின் முதலாம் மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு சென்று கையொப்பமிடவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன்,...

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவர், கடமைகளை பொறுப்பேற்பு

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.விஜிந்தன், வியாழக்கிழமை (26) பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கடந்த 2ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனால் பனை அபிவிருத்திச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, 25 ஆம் திகதி பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். வடமாகாண...
Ad Widget

எலிப்பாஷணங்களை வைத்து ‘குழந்தைகளை கொல்ல வேண்டாம்’

வீடுகளிலுள்ள எலிகளைக் கொல்வதற்காக இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய தரமற்ற எலிப்பாஷணங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசநோய்ப் பிரிவின் தலைவரும் இயல்பியல் நோய் நிபுணருமான வருண குணதிலக்க, இவ்வாறான எலிப்பாசனங்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். விதவிதமான நிறங்களில் தயாரிக்கப்படும் இந்த எலிப்பாசனங்களை வீட்டின் பல்வேறு...

தந்தையின் பாதுகாப்பு பிரிவில் மகன் இணைவு

கடற்படையில் கடமையாற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய தந்தையின் பாதுகாப்பு பிரிவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு யோசித்த ராஜபக்ஷ ஏற்கெனவே கோரியிருந்தார்.

உண்மையைக் கூறுவது ஒருபோதும் இனவாதமாகாது : பிரதமர் ரணிலுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதில்

உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனக் கோரு­வது ஒரு­போதும் இன­வா­த­மாக முடி­யாது. உண்­மையை முதலில் அறிந்தால் தான் நல்­லெண்ணம் பிறக்க வழிவகுக்­கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட­மா­காண சபையில் அண்­மையில் நிறை­வேற்­றப்­பட்ட இனப்­ப­டு­கொலை தீர்­மானம் குறித்து, "நல்­லாட்­சி­மிக்க அர­சாங்­கத்­துடன் விளை­யாட வேண்டாம். இதுவே இன­வா­தி­க­ளுக்­கான எனது இறுதி எச்­ச­ரிக்கை" என பிர­தமர் ரணில்...

சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு!

சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சங்கத்தானை ரயில் நிலையம் முன்பாக உள்ள காணியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த காணியை இன்று...

மருதங்கேணி கடலிலிருந்து விரைவில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம்! – முதலமைச்சர்

வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் 37 லட்சம் ரூபா பெறுமதியில் தீயாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும்...

நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய நோர்வே நிபுணர்கள் வருகை

வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளது தொடர்பாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டு நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக வடக்கு விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (25.02.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்....

ஐ.நா. உயர் அதிகாரி சனியன்று கொழும்பு வருகிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்டே இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு பயணமாவார் என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஜெப்ரி பெல்ட்மன்ட் தனது இலங்கை...

வித்தியாசமான புகைப்போக்கி

யாழ்ப்பாணம், சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் சமையல் அறையில் அமைக்கப்பட்ட புகைப்போக்கி வித்தியாசமான முறையில் எண்ணெய் பரல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வீடுகளில் சீமெந்து கட்டுக்களிலான புகைப்போக்கிகள் வீடுகளில் நிர்மாணிக்கப்படுவது வழமை. எனினும் இந்த புகைப் போக்கியானது 5 எண்ணெய் பரல்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ளது. புகைப்போக்கி சரிந்து விழாமல் இருப்பதற்கு உறுதுணை கம்பிகளும் கட்டப்பட்டுள்ளன.

இரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்று புதன்கிழமையுடன் நிறைவு செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

புதிய இராணுவத் தளபதி – ஜனாதிபதி சந்திப்பு!

புதிதாக அண்மையில் நியமனம் பெற்ற இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் எ.டபிள்யூ.ஜே.கிரிசாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார். புதிதாக இராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட இவர் தனது நியமனத்தின் பின் நேற்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 36 வருட கால சேவையை பூர்த்தி...

சுழிபுரம் கொலையாளியை கொல்லப்பட்டவரின் மனைவி, அடையாளம் காட்டினார்

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கடந்த மாதம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அறுவரில், பிரதான சந்தேக நபரை கொல்லப்பட்டவரின் மனைவி, செவ்வாய்க்கிழமை (24) அடையாளம் காட்டினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மல்லாகம் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றபோது, சந்தேகநபர்கள் அறுவரும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு...

ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத்தேர்வு

இலங்கை ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத் தேர்வு இலங்கை சாரணர் தலைமையக பிரதி பிரதம ஆணையாளர் எஸ்.ஏ.அமரசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட சாரண ஆணையாளர் ச.சௌந்தரராஜனினின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், இலங்கை சாரணர் தலைமையகத்தைச் சேர்ந்த ரூபன் ஆரியரத்தின, எஸ்.சௌந்தரராஜன், சரத் சோம விக்கிரம சிங்க,...

கணவனுக்காக கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது

யாழில் கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி மானிப்பாய் பொலிசாரால் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் திருமணம் முடித்துள்ளார். அவர் தனது தனது கணவர் கேட்டதற்கு இணங்க, 50 கிராம் உடைய கஞ்சாவை வாங்கிச் சென்றுள்ளார். இதன்போது வீதியில் வைத்து பொலிசார் இவரைக் கைதுசெய்துள்ளனர்....

ஜெயக்குமாரியைத் தொடந்தும் தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவு!

பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி கடந்த வாரம்...

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

கடந்த 30 வருடகாலமாக பேராளிகளாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களின் தரத்துக்கு ஏற்ப பதவிகளை வழங்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது, சுகிர்தன் இந்த பிரேரணையை...

வடமாகாண சபையின் அவை அமைப்பு மாற்றப்படவுள்ளது

வடமாகாண சபையின் அவை அமைப்பை மாற்றுவதுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற போதே, அவைத்தலைவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், அவை நடவடிக்கை இடம்பெறும் போது அவைக்கு குறுக்கே...

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாணத்தில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் பட்டம் பெற்று வெளியேறிய வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கவேண்டும் என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது, சுகிர்தன்...

மக்கள் செறிந்து வாழும் பகுதியில் பருத்தித்துறை நகர சபை குப்பைகளை கொட்டுகிறது

பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தும்பளை பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நகர சபையால் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினார்கள். நகர சபை தவிசாளர் சபா ரவீந்திரனுக்கு சொந்தமான காணியொன்றிலே இவ்வாறு குப்பைகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இதனால் தங்களுக்கு வீடுகளைச் சூழ்ந்து புகைமூட்டம் காணப்படுவதுடன்...
Loading posts...

All posts loaded

No more posts