- Friday
- July 4th, 2025

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்ரெம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்ஸில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் வலியுறுத்தினார். இலங்கையில்...

இளவாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சகோதரர்களின் இரண்டு படகுகள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு தீயிட்டு எரிக்கப்பட்டதாக இளவாலை பொலிஸார் திங்கட்கிழமை (16) தெரிவித்தனர். சகோதரர்களான பாக்கியநாதன் றேகன் மற்றும் பாக்கியநாதன் கமில்ரன் ஆகியோருடைய இரண்டு படகுகள், இரண்டு படகு இயந்திரங்கள் 40 வலைகள் என்பன தீயால் எரிந்துள்ளன. இரண்டு படகுகள் எரிவதாக பொதுமக்கள் வழங்கிய...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரின் கைப்பையில் இருந்த நகைகள் திருட்டுப்போன சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறினர். பெண்ணொருவர் தனது சிறிய கைப்பையை தனதருகில் வைத்துவிட்டு, அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த தருணம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் அதனை திருடிச் சென்றுள்ளார். அலைபேசியில் உரையாடிய பின்னர், தனது கைப்பையை தேடியபோதே...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பு மட்டத்தில் நீலப்படையணி எனும் பெயரில் கடந்த காலங்களில் செயற்பட்ட படையணி, இனிமேல் செயற்படாது என்றும் அப்படையணி ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் சு.க.வின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இனிமேலும் நீலப்படையணி போன்ற படையணிகள் செயற்பட மாட்டாது. எங்களிடம் ஸ்ரீ லங்கா...

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு திருயாத்திரை மேற்கொண்டிருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் சமூக சேவை நிதியத்துக்காக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.7 மில்லியன் ரூபாய் நிதியை, இலங்கைக்கே மீண்டும் பரிசளிக்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார். அந்த நிதியில், இலங்கையிலுள்ள ஏழைகளுக்கான உதவிகளைச் செய்து, அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு கொழும்பு...

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாச்சாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு நான்குநாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் புதுடில்லியில் நேற்று திங்கட்கிழமை மதியம் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்தச் சந்திப்பின் இறுதியில் முக்கிய ஒப்பந்தங்கள்...

கீழுள்ள படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக பொலிஸூக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இணையத்தளங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் தேடப்பட்டுவருகின்றார். குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்தேகநபரை கைதுசெய்துசெய்வதற்கு தேடிவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர். திஸாநாயக்க முதியன்செலாகே சுஜித் நிலந்த என்ற...

பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு...

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திரமோடியை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாரியார், இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவலோக்தேஸ்வர போதிசத்துவர் சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15) பிற்பகல் திரை நீக்கம் செய்து வைத்தார். கி.மு 08ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போதிசத்துவர் சிலை அனுராதபுர வேரகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையான இதன் பாதங்கள் லலிதாசன...

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை யாழ்.பிரதான நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய, வடக்குமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்குமாகாண ஆளுநர், வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர்கள்,...

கோண்டாவில் பகுதியில் வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வீதியில் நின்றுகொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (15) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சண்டையொன்றில் ஈடுபடும் நோக்குடன் வீதியில் நின்றிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கோண்டாவில் பகுதியில் சனிக்கிழமை (14) மாலையில்...

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை குறித்த தீர்மானம் பற்றி, வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கருத்து வௌியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இலங்கை அரசின் இனப் படுகொலை தொடர்பாக அண்மையில் வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஜனாதிபதி சிறிசேனவிற்கோ அல்லது அவரின் அரசிற்கோ எதிரானதல்ல எனவும் முன்னைய அரசுகளையே, குறிப்பாக...

வன்னி, மற்றும் தீவக வலய பாடசாலைகளில் பணியாற்றி தமது பணிக்காலம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி பெருந் தொகைப் பணத்தை பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த சம்பவமொன்று யாழ் நகரில் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ் நகரின் கஸ் தூரியார் வீதியிலுள்ள நகைக் கடையொன்றின் உரிமையாளருக்கு கடந்த சில தினங்களாக இடம் பெற்று வருவதாக அக்கடையின் உரிமையாளர்...

கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மாத்திரமே நிறுத்த முடியும். மக்கள் வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாயில் கொட்டப்படுவதை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மக்களுடன் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...

வட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலனின் இராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுழற்சி முறையில் வட மாகாண சபை உறுப்பினர் பதவி வகிப்பதாகக்கூறி, மேரி கமலா வட மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில், ஒரு வருட காலத்தில்...

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது. இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில்...

யாழ்.விக்டோரியா வீதியில் வைத்து மாணவியொருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ். விக்டோரியா வீதியால் வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியை வானில் வந்தவர்கள் நேற்று காலை கடத்திச் சென்றுள்ளனர். பூநகரியை சேர்ந்த மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். பூநகரியில் வசிக்கும் இவர், சனி, ஞாயிறு தினங்களில் அரியாலையிலுள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்து...

இலங்கையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் வேளையில்,...

All posts loaded
No more posts