Ad Widget

மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத பிரதம செயலாளர்

வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனுடைய வாகனத்தில் ‘பிரதம செயலாளர்’ என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது.

north

மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தும் போது, மூன்று மொழிகளிலும் பெயர் பலகை வைக்கவேண்டும் என்பது கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழ்வதால் வடமாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களின் பலகைகள் மற்றும் வாகனங்களின் பெயர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்படவேண்டும் என வடமாகாண சபையில் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts