Ad Widget

யாழ். நகரில் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இந்தப் பயணத்தின்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நகரில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றன.

இந்திய இழுவைப்படகுகளால் வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த முறையைத் தடுக்கக் கோரியும், இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரியும் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts