- Wednesday
- September 17th, 2025

பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற பிரச்சினையாகும். இதனை குறுகிய நாட்களுக்குள் தீர்க்க முடியாது. எனது கடமையை நான் உணர்ந்து செல்லும் இடங்களிலுள்ள பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பேன் என மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்புப் ஆகிய பகுதிகளுக்கு...

யாழ்ப்பாணம், மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை கடந்த 25ஆம் திகதி முதல் காணவில்லையென அவரது தாயாரால் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. 25ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் குளிர்பான நிலையமொன்றின் வேலைக்காக தனது மகனை அழைத்துச் சென்றதாகவும் அப்போது சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும்...

நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 86 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து வியாழக்கிழமை (26) மாலை கைது செய்ததாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க...

"இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. உண்மைகள் கண்டறியப்படுவதன் ஊடாகவே இந்தத் தீர்வை எட்ட முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே, தற்போதுள்ள அரசு உண்மையைக் கண்டறிந்து, சர்வதேசத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்." - இவ்வாறு தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி...

சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது குண்டுவெடிப்பல்ல என்றும் புதைத்துவைக்கப்பட்டிருந்த வெடி மருந்தே சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீட்டின் அருகில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் புதைத்துவைக்கப்பட்டிக்கலாம் எனக் கருதப்படும் கொட் 8 எனப்படும் வெடி மருந்தே திடீரென தீப்பற்றி எரிந்தது எனவும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையெனவும் அவர்கள்...

தமிழ்நாட்டின் பல முகாம்களில் அகதிகளாக வசித்த 40 பேர் தாமாகவே யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் உதவியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பினர் என 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இம் மக்கள் தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்குத் திரும்புவது இதுவே முதல் தடவை. எனினும் நாடு திரும்பும் இந்த அகதிகளுக்கு அரசாங்கம்...

கொழும்பு, நாரஹன்பிட்டி பகுதியில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...

தற்போதைய அரசியல் மாற்றத்தை கருத்திற்கொண்டு எதிர்கால அரசியல் சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்படும். அதுவரையில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளும் முடிவு எதனையும் எடுக்கவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை செய்யவில்லை என வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தொவித்தார். யாழ்.மேல் நீதிமன்றம் கமலேந்திரனை யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதற்கு வியாழக்கிழமை (26)...

உடல்களில் சன்னங்களை தாங்கியவாறு வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வைத்திய வசதிகளை ஏற்படுத்த வடமாகாணத்தில் அதற்கான வைத்தியசாலையை அமைப்பதற்கு மத்திய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா வியாழக்கிழமை (26) நடைபெற்ற வேளையில்...

பாடசாலைகளில் அருகிலுள்ள பெட்டிக் கடைகளில் போதைவஸ்துக்கள் பாவனை. இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு இந்த போதைவஸ்துக்கள் விற்கப்பட்டுள்ளன. இதனால் பாடசாலைகளுக்கு அருகில் பெட்டிக்கடைகள் இருக்கக்கூடாது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா வியாழக்கிழமை (26) நடைபெற்ற வேளையில் அந்நிகழ்வில்...

எந்த இனத்தின் வளர்ச்சிக்கு ஏதாவதொரு விடயம் முக்கியமானதாக இருந்தாலும் கல்வி முக்கியமானதொன்று. தமிழர்களின் வளர்ச்சியில் கல்வியின் வளர்ச்சி மிகவும் அவசியமாகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை வியாழக்கிழமை (26) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 'வடமாகாணத்தின்...

யாழ்.மாவட்டத்தில் 2014 – 2015ஆம் ஆண்டு காலபோக நெற்செய்கையில் செய்கை பண்ணப்பட்ட நெல், கூட்டுறவுச் சங்கம், நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றினால் எதிர்வரும் சனிக்கிழமை (28) முதல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நெல் சந்தைப்படுத்தும் சபையால் சாவகச்சேரி பகுதியிலும், கூட்டுறவுச் சங்கத்தால் பண்டத்தரிப்பு,...

தமிழ் மக்கள் அனைவரும் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை விரும்புகின்றார்கள். அதை உணர்ந்து செயற்பாட்டிலும் காட்டியுள்ளார்கள். எனவே மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குவதற்கு வலுவான பொதுக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளோம். அதற்கு பேரம்பேசும் அரசியல் பலம் தேவை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்....

வடக்கு கடற்பரப்பில் புதன்கிழமை (25) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இந்திய மீனவர்களின் றோலர் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து பாரிய சேதத்தை விளைவித்துள்ளன என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த மீனவர்களில் 150க்கும் மேற்பட்டவர்களின் வலைகளை றோலர்களில் வருகை தந்த இந்திய மீனவர்கள், நாசம் செய்தனர் என்று வடமராட்சி...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில், அவரது தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பங்கேற்பதுடன் வடக்கு அமைச்சரவையும் பங்கெடுக்கவுள்ளது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதன் முதலாக வடக்கு மாகாணத்துக்கு-யாழ்.மாவட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேன வரவுள்ளார். அவரின் தலைமையில் இடம்பெறும்...

மின் கட்டணம் மற்றும் இயந்திரங்களை இயக்க பயன்படுத்தும் எண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளதாக மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தெமட்ட கொடயிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதுடன் புதிதாக மின் இணைப்பு பெற்றுக்கொள்ளும் முறையும் இலகு வாக்கப்பட்டுள்ளது...

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றன. . இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அவருடன் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், , நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஸ்பிரேமச்சந்திரன்...

இங்குள்ள மக்களை மீள்குடியேற்றிய பின்னரே இந்தியாவில் உள்ள அகதிகள் மீள்குடியேற்றப்படுவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இன்று வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டு வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்த அவர் அங்குள்ள மக்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் - வடபகுதி உள்ளிட்ட இப்பகுதி மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான நிறைய பிரச்சினைகள்...

All posts loaded
No more posts