- Wednesday
- September 17th, 2025

இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணிகளையும், வீடுகளையும் விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பொலிஸ்நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 13 வீடுகளையும், 8 விவசாயக்காணிகளையும் உள்ளடக்கி இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளையும் வீடுகளையும் விடுவிக்கக்கோரியே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளவாலைப் பங்கு தந்தை ஜெயரஞ்சன் அடிகளார் தலைமையில் பொலிஸ் நிலையத்தின் முன்பாகக்...

சாவகச்சேரி பெருங்குளம் சந்தியில் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள். கெருடாவிலைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (வயது 28), சிவகுமார் கோபன் (வயது 23) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். முன் பகை காரணமாக இவர்கள் இருவரும் வாளால் வெட்டப்பட்டதாகவும் சந்தேகநபர்களை கைது செய்தவதற்கான...

வட பகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள். அது போன்றுதான் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்தே மத்திய அமைச்சர்கள் தினந்தோறும் வடக்குக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே எமது மக்களின் கருத்தாக உள்ளது. அவ்வாறு இல்லாமல், உண்மையாகவே தமிழ் மக்கள்...

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு 7 மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையில் சனிக்கிழமை (28) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் அவர் கூறுகையில், வடமாகாண மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி...

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள், இன்னமும் பாதுகாப்பு முன்னரங்க வேலி பின்நகர்த்தப் படவில்லை. இதனை நகர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நேற்று ராணுவத்தினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு, வலி.கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்களினுள் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த் துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னோடியாக, விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்களை மீள்குடியேற்ற அமைச்சர்...

லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் நேற்று மாலை நடந்த விபத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். ஹம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பென்ஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. மேற்கு ஹம்டனில் இருந்து றோயல்...

எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு...

பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான என்புமுறிவு உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சு.வித்தியானந்தனின் குடும்பத்தினரால் (அமெரிக்கா) இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, என்புமுறிவு சத்திரசிகிச்சை உபகரணம், வீடியோ மூலம் சிகிச்சை அளிக்கும் உபகரணம், மார்பு சிகிச்சை உபகரணம் போன்ற வகையிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் அனைத்துலக...

கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றதைக் கண்டித்தும் இவ்வாண்டு நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குறிப்பிட்டும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வெள்ளிக்கிழமை (27) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கடந்த ஆண்டு இடம்பெற்ற...

கச்சதீவு செல்வதற்கான பதிவு செய்யப்பட்ட படகுகள் குறைவாக இருப்பதால் 200க்கு மேற்பட்ட மக்கள் குறிகட்டுவானில் படகுகளுக்காக காத்திருக்கின்றனர். இதுவரையில் 700க்கு அதிகமான மக்கள் பதிவு செய்யப்பட்ட 5 படகுகள் மூலம் சென்று விட்டனர் எனினும் மீதமுள்ள 200க்கு அதிகமான மக்கள் குறிகட்டுவானிலேயே காத்திருக்கின்றனர். இதேவேளை படகு மூலம் கச்சதீவு செல்வதற்கு மாத்திரம் 5 மணித்தியாலங்கள் தேவை...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவெடுக்கும். அமர்தலிங்கத்தினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் இனி ஒரு போதும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியான தூய்மையான ஹெல உறுமய யாருக்கும் திறக்காத சர்வதேச கதவுகள் எதிர்க்கட்சிக்காக திறக்கும்...

இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை (27) இளவாலை ஹென்ரியரசர் கல்லூரியிலும் வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைத்ததோடு, யாழ். மத்திய கல்லூரிக்கு கணணிகளையும் வழங்கி...

128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார்....

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கொலை குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொம்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.பியுடன் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கு பதவியேற்று வருவதற்கு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 நாள்களாகக் கழிவகற்றப் படாததால் அங்கு குப்பைகள் நிரம்பி வழிகின்றன. அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் செயலாளருடனான சந்திப்பை அடுத்து 2 நாள்களில் அவற்றை அகற்றுமாறு முதலமைச்சர் யாழ்.மாநகர சபைக்குப் பணித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஸ்ரீப வானந்தராஜா தெரிவித்தார். யாழ்.மாநகர எல்லையில் குப்பை அகற்றுவது தொடர்பான சிக்கல்...

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்தி நிறுவனத்தின் குழுநிலை ஆய்வுக் கலந்தரையாடல் ஒன்று 2015-22-02 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சிந்தனைக் கூடத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 4மணிக்கு, “வடக்கின் இன்றைய நிலை” எனும் தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தலைமையுரையாற்றிய சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் பின்வரும் கருத்துகளை முன்வைத்தார்....

இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும், எனவே அரச அதிகாரிகள் உடனடியாக...

மகேஸ்வரி நிதியம் தமது தொழிலை அழித்துவிட்டது என்று கூறி யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர். ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே!, எங்கள் வைப்புப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தா!, சேமிப்பு பணத்தை எமது சங்கத்திடம் மீள ஒப்படை! போன்ற கோரிக்கைகள் முன்வைத்தே...

வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்...

வடமாகாண சபையில் கடந்த 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் பிரதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 'தமிழ் மக்களின் உண்மையான அழிவுகளையும் இழப்புக்களையும் விளங்கிக்கொண்டு நீதியான நியாயமான முறையில் செயற்பட...

All posts loaded
No more posts