Ad Widget

விபூசிகாவை விடுவிப்பதில் சிக்கல்

பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியை நம்பி, அவரது மகள் விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து வெளியில் எடுப்பதால், எதிர்காலத்தில் சிறுமி பாதிக்கப்படலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜெயக்குமாரி சார்பாக நேற்று வியாழக்கிழமை (12), நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளில் ஒருவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (10) பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி, இன்று வெள்ளிக்கிழமை (13) கிளிநொச்சிக்கு வருகின்றார்.

இந்நிலையில், அவரது மகள் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருந்து விடுவித்து தாயாருடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சட்டத்தரணிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள், வியாழக்கிழமை (12) மாலை கூடி ஆராய்ந்தனர்.

ஜெயக்குமாரி விடுதலையாகவில்லை. பிணையில் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட முடியும் என்ற நிலையுள்ளது.

அவசரப்பட்டு சிறுமியை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவித்து, அந்தச் சிறுமியை நடுத்தெருவில் விடவேண்டிய நிலையொன்று உருவாகும். இதனால் அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டியுள்ளதாக அந்த சட்டத்தரணி கூறினார்.

Related Posts