Ad Widget

மலக்கழிவை எரிக்கும் இயந்திரம் உருவாக்கம் – மாநகர சபை ஆணையாளர்

மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றினை தாம் உருவாக்கி வருவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் எஸ். பிரணவநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபை எல்லைக்குள் இருந்து அகற்றும் மலக்கழிவுகள் கடந்த காலங்களில் கல்லுண்டாய் வெளியில் கொட்டப்பட்டு வந்தது.

தற்போது கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அதனையடுத்து மலக்கழிவு கொட்டுவது நிறுத்தப்பட்டதுடன் மாற்று நடவடிக்கை ஒன்றினையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அதனையடுத்து, மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்குவதற்காக தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு, எங்கள் ஊழியர்களைக் கொண்டு இயந்திரத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.

இதற்கான உபகரணங்கள் கொழும்பிலிருந்து கொள்வனவு செய்து இயந்திரத்தை உருவாக்கும் பணியை முன்னேடுத்து வருகின்றோம்.

எனவே விரைவில் இயந்திரம் உருவாக்கப்பட்ட பின்னர், அதனை கல்லுண்டாய் வெளியில் பொருத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்யவுள்ளோம்.

இருப்பினும் மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரத்தை கொள்முதல் செய்வதென்றால் 30 மில்லியன் ரூபாய் தேவைப்படும். எனினும் நாம் அதற்கான தொழில்நுட்பத்தை அறிந்ததன் பயனாக குறித்த இயந்திரத்தை தற்போது எங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts