Ad Widget

புதிய அரசுக்கு வடக்கு ஆதரவளிக்க வேண்டும் – அமெரிக்கா

வடக்கு, தெற்கு இடைவெளியைக் குறைப்பதற்கு, புதிய அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார் அமெரிக்காவின் பிரதித் தூதுவர்.

வடக்கு மாகாணத்திற்கு நேற்று வந்திருந்த அமெரிக்காவின் பிரதித் தூதுவர் அன்ரூ சி மென் தலைமையிலான குழுவினர், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக் னேஸ்வரன், ஆளுநர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரைச் சந்தித்தனர். அதன்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, தெற்கு மாகாணங்களிடையே இருந்து வரும் இடைவெளியைக் குறைப்பதற்கு இலங்கை அரசு மேற்கொண்டு வரும் ஆற்றல் மிகு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சந்திப்புக்களின் போது பிரதித் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

“வடக்கு உள்பட முழு இலங்கைக்கும் சிறந்த தருணமாகும். நிலங்களைத் திருப்பிக் கொடுத்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமற் போனோரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கின்றோம்” என்று மென் குறிப்பிட்டார்.

“இலங்கை மக்கள் அனைவருக்குமான மனித உரிமை, நல்லாட்சி, வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறுதல் மற்றும் பொருளாதார மேம்பாட்டை அமெரிக்கா தொடர்ந்தும் ஊக்குவிக்கும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் புதிய அரசுக்கு உதவும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts