Ad Widget

இலங்கை, இந்திய மீனவர்களில் 102 பேருக்கு விடுதலை

இருநாட்டு கடல் எல்லைகளையும் மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் இந்திய மீனவர்களில் 102 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தரவிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைப் போன்று இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஊடக செயலகம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் விடுவிக்குமாறு இந்திய அரசாங்கம் பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts