Ad Widget

வெளிநாட்டு விசாரணை நாட்டுக்கு அபகீர்த்தி – சந்திரிகா

இலங்கையில் 26 வருடங்களாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிநிற்பதை இலங்கையில் வாழ்கின்ற சகலரும் எதிர்க்கின்றனர். அந்த கோரிக்கை இலங்கைக்கு அபகீர்த்தியானதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

chandrika_bandaranayake

லண்டனிலிருந்து வெளிவரும் ஐ.பி.டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர், மேலும் தெரிவித்திருப்பதாவது,

அவ்வாறான சம்பவம் தொடர்பில் ஐ.நா அமைப்பின் ஊடாக சர்வதேச விசாரணையை கோருவது இலங்கைக்கு ஏற்படுத்துகின்ற அபகீர்த்தியாகும். இலங்கையினால் மேற்கொள்ளப்படும் தேசிய விசாரணைக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்ததாகும்.

அதேபோல, தேசிய விசாரணை முழு நாட்டுக்கும் தேவையில்லை. அது எமது நாட்டுக்கு செய்கின்ற அபகீர்த்தியாகும். என அவர் தெரிவித்துள்ளார்

Related Posts