ஜெயக்குமாரியைத் தொடந்தும் தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவு!

பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜெயகுமாரி கடந்த வாரம்...

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

கடந்த 30 வருடகாலமாக பேராளிகளாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களின் தரத்துக்கு ஏற்ப பதவிகளை வழங்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது, சுகிர்தன் இந்த பிரேரணையை...
Ad Widget

வடமாகாண சபையின் அவை அமைப்பு மாற்றப்படவுள்ளது

வடமாகாண சபையின் அவை அமைப்பை மாற்றுவதுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற போதே, அவைத்தலைவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், அவை நடவடிக்கை இடம்பெறும் போது அவைக்கு குறுக்கே...

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாணத்தில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் பட்டம் பெற்று வெளியேறிய வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கவேண்டும் என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது, சுகிர்தன்...

மக்கள் செறிந்து வாழும் பகுதியில் பருத்தித்துறை நகர சபை குப்பைகளை கொட்டுகிறது

பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தும்பளை பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நகர சபையால் கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினார்கள். நகர சபை தவிசாளர் சபா ரவீந்திரனுக்கு சொந்தமான காணியொன்றிலே இவ்வாறு குப்பைகள் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றன. இதனால் தங்களுக்கு வீடுகளைச் சூழ்ந்து புகைமூட்டம் காணப்படுவதுடன்...

தவறணையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது

கிளிநொச்சி பிரமந்தனாறு நாதன் திட்டப் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை (23) இரவு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த தர்மரத்தினம் தர்மசீலன் (வயது 32) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கல்லாறு பகுதியிலுள்ள தவறணையில் திங்கட்கிழமை...

வெல்டிங் வேலை செய்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்

கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (24) வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்தவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.அரியாலை பகுதியை சேர்ந்த எஸ்.ஆனந்த் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர், வீடொன்றின் உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, தவறி வீழ்ந்துள்ளார். இவருடன் பணியாற்றியவர்கள் உடனடியாக...

சமூக சுகாதாரத் தொண்டர்கள் வடமாகாண சபையின் முன்பாக ஆர்ப்பாட்டம்

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண சபையின் முன்பாக செவ்வாய்க்கிழமை (24) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெறும் வேளையில், அமர்வில் கலந்துகொள்ள வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,...

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க நாம் தடையல்ல – முதலமைச்சர்

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கு உள்ளூராட்சி அமைச்சுக்கு உரிய முறையில் கோரிக்கையினை முன்வைத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாணமுதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 25 ஆவது மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் ரவிகரன் முதலமைச்சரிடம் வாய்மொழி மூலமாக முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்கான பிரேரணையை கடந்த 2014.01.27 ஆம் திகதி...

சுமந்திரன் கொடும்பாவி எரிப்பு தொடர்பில் வடமாகாணசபையில் விவாதம்!

வடமாகாணசபையின் இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அண்மையில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார். இதற்கு ஆதரவாக பேசிய  பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தார். இதன் போது குறுக்கிட்ட மற்றொரு உறுப்பினர் அனந்தி...

யுத்தத்துக்கு கட்டளையிட்ட மஹிந்தவே நீதிபதியாகவும் செயற்பட்டார்!- மன்னார் ஆயர்

யுத்தத்துக்குக் கட்டளையிட்ட போர்க் குற்றவாளியான மஹிந்த ராஜபக்‌ஷவே போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை நியமித்தார். குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் நிலைதான் இது. இவர்களிடம் இருந்து எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்புவது. இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை. ஐ.நா....

சிறுவனை மோதிய விமான படை வீரருக்கு அபராதம்

புன்னாலைக்கட்டுவன் குரும்பசிட்டி பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி சிறுவன் ஒருவரை மோதிய விமானப்படையின் வாகன சாரதிக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன் செவ்வாய்க்கிழமைi (24) தீர்ப்பளித்தார். விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் குடும்பத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் நட்டஈடு...

மே மாதம் சைவப்புலவர் பரீட்சை

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் சைவப்புலவர், இளம் சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலர் சங்கத்தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். மே முதலாம் திகதி தொடக்கம் 4ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. சைவப்புலவர் பரீட்சைக்கு...

கச்சதீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து ஆலயத்துக்கு வருவதற்காக இதுவரையில் 6,200 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அவரிடம்...

முதல் பல்கலைக்கழகக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பம்

இலங்கையில் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி அமைச்சின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழகக் கல்லூரியில் நேற்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. விரைவில் அது திறந்து வைக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரி ஜே. ஜூட் வோல்ட்டன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமுர்த்தியிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த...

வடக்கு அவை 2 மணி நேரத்துக்கு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே வடக்கு மாகாண சபை 2 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 25 ஆவது அமர்வு இன்று நடைபெறும் நிலையில் ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மாபெரும்...

போராட்டத்திற்கு யாழ். ஊடக அமையம் முழு ஆதரவு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையினை எதிர்வரும் மார்ச் மாதத்தில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை பொறுத்தவரையில் காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்பதே யதார்த்தமாகும். அந்தவகையில் தமிழ் மக்கள் ஐ.நா...

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வன்னி அமைச்சரின் தலையீட்டால் வீட்டுத் திட்டத்தில் முறைகேடு

மத்திய அரசில் அங்கத்துவம் வகிக்கும் வன்னி அமைச்சரின் அதீத தலையீட்டினால் மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்காக இந்திய அரசினாலும் வேறு சர்வதேச நிறுவனங்களினாலும்...

ஐ.நா.விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடக் கோரி பல்கலை. சமூகத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்று மாபெரும் பேரணி!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,...

வாள்வெட்டில் இளைஞர் படுகாயம்

மந்திகைச் சந்தையில் திங்கட்கிழமை (23) மாலை இடம்பெற்ற வாள்வெட்டில், தலையில் படுகாயம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தனர். புலோலி கம்பவதியை சேர்ந்த நடராஜா மனோகரன் (வயது 21) என்பவரே படுகாயமடைந்துள்ளார். சந்தையில் வெற்றிலை வியாபாரம் செய்யும் இவரை, சந்தைக்குள் நுழைந்த கும்பலொன்று வாளால் வெட்டிவிட்டு...
Loading posts...

All posts loaded

No more posts