Ad Widget

முறையற்ற நியமனம்; விசாரணைக்கு 7 பேர் கொண்ட குழு

வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள முறையற்ற நியமனங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு 7 பேர் கொண்ட குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 26ஆவது மாதாந்த அமர்வு இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இன்றைய அமர்விலேயே முறையற்ற நியமனம் தொடர்பில் விசாரணையினை மேற்கொள்ள வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் உள்ளிட்ட 7பேர் கொண்ட குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைவராகவும் அவருடன் உறுப்பினர் கஜதீபன் , பரஞ்சோதி , சர்வேஸ்வரன், லிங்கநாதன் , விந்தன், அஸ்வின் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அவைத்தலைவர் சபையில் அறிவித்தார்.

அதற்கமைய குறித்த குழு எதிர்வரும் 3மாதங்களுக்குள் தங்களுடைய விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

அதனை முதலமைச்சரின் அங்கீகாரத்தின் பின்னர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts