Ad Widget

நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடுவார்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் நடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மனவடுவ தெரிவித்தார். அமைந்த புதிய அரசாங்கத்தில் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு உடன்பாடு ஏற்பட்டிருந்தது. எனினும் அது தோல்வியில் முடிந்து விட்டது. ஆனாலும் இது குறித்து...

மூடுவிழாவுக்கு தயாராகிறது மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம்!

மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்தல ராஜபக்‌ஷ விமான நிலையம் முன்னரே...
Ad Widget

சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை வேண்டும் – சிவராசா

வேலணை மத்திய கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலையை உடைத்த விசமிகள் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா தெரிவித்தார். வேலணை மத்திய கல்லூரியின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை கடந்த புதன்கிழமை (14) இரவு உடைக்கப்பட்டது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை அமைப்பாளரும், வேலணை...

அழைப்பு விடுக்காமையால் விசாரணைக்கு செல்லவில்லை

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் உரிய அழைப்புக்கள் கொடுக்கப்படாமையால் விசாரணைக்கு செல்லவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் குறிப்பிட்டார். கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களை கடந்த 12ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், காரைநகர் பிரதேச...

மஹிந்தவின் கொள்கலன்களுக்கு சீல்

ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் தேநீர்க் கோப்பைகள், பீங்கான்கள், கணினிகள், முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பீங்கான்கள், சிவப்பு நிற சால்வையுடன் கூடிய டி-சேர்ட்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து மீட்ட பொலிஸார், அவற்றுக்கு சீல் வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, தங்கொட்டுவையில் அமைந்துள்ள போசிலன்...

எதிர்க்கட்சி தலைவராக நிமல் நியமனம்

எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக டப்ளியு டி ஜே செனவிரத்னவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வட, கிழக்கின் பாதுகாப்பு நிலைமை; அறிக்கை கோரும் அமைச்சு

வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. அங்குள்ள முகாம்கள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர்...

நீதி விசாரணை கோரும் நாடுகடந்த இலங்கை ஊடகவியலாளர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை ஏற்று, நாடுகடந்து வாழ்கின்ற ஊடகவியலாளர்கள் நாடுதிரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் மூலம் ஊடக சுதந்திரத்திற்கான வழிகள் பிறக்கும் என்ற நம்பிக்கையில் நாடுதிரும்பத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான சுனந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். ஆனால், இலங்கையில்...

தேசிய நிறைவேற்று சபை நியமனம்: சம்பந்தன் உள்ளடக்கம்! –

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு...

பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருப்பது கொள்கைக்கு மாறானது

பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருப்பது கொள்கைக்கு மாறானது. அவ்வாறான தலையீடுகள் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்குத் தடையாக அமையும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக்குழு கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை...

ஸ்ரீ. சு. கட்சியின் தலைவர் பதவி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஒற்றுமை நிலவவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பது தொடாபாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 50 வருட காலமாக மிகுந்த அர்பணிப்புடன் கட்சி தலைமை உட்பட பல பதவிகளை வகித்தவன் என்ற வகையிலும், கட்சியை வளர்த்தெடுத்தவன்...

மகேஸ்வரி நிதியம் மணல் அகழ்வதற்கு தற்காலிகத் தடை!

மகேஸ்வரி நிதியம் மேற்கொண்டு வரும் மணல் அகழ்வுக்கு பொலிஸாரால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி இன்று வெள்ளிக்கிழமை வடமராட்சி கிழக்கு மக்களால் நாகர்கோயில் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்தநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த மகேஸ்வரி நிதியத்தைச் சேர்ந்த சிலர் 'இது தமக்குச் சொந்தமான இடம். அனுமதிப்பத்திரத்துடனேயே மணல் அகழ்கின்றோம்....

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார் – அங்கஜன்

நான் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவன். அந்தக் கட்சிக்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவதாகவுள்ளார். எனவே அந்தக் கட்சிக்குள் இருந்து அவருடன் செயற்பட தாயாராகவுள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கடமைகளை பொறுப்பேற்றார்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அலரி மாளிகையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இத்தபான தம்மாலங்கார தேரர் பிரதமருக்கு நல்லாசி வழங்கினார். பிரதமரின் பாரியாரான மைத்திரி விக்கிரமசிங்க உட்பட பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரியின் கட்அவுட், பேனர்களை அகற்ற உத்தரவு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடஅவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் நாடு முழுவதிலும் அவரது கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகாற்றுமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் தமது உருவப்படம் உள்ள கட்அவுட்கள் மற்றும் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி...

பொன்சேகாவுக்கு உயர் பதவி: இன்று தீர்மானிக்கப்படும்

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு தரப்பில் உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் பீ.எம்.யூ.டீ.பஸ்நாயக்கவிடம் கேட்டபோது, 'அவ்வாறானதொரு தீர்மானம் இருப்பின், அந்த தீர்மானம் ஜனாதிபதியால் எடுக்கப்பட்டு ஜனாதிபதி செயலாளர் ஊடாக தனக்கு அறிவிக்கப்படும் என்றும் இதுவரையில் அவ்வாறானதொரு அறிவிப்பு தனக்கு கிடைக்கவில்லை'...

ரணில் தலைமையில் கன்னி அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலேயே அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அமைச்சரவைக்கூட்டத்துக்கு முன்னதாக இன்னும் சிலர் அமைச்சர்களாக அல்லது பிரதியமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரொட்டி கொடுத்து ரயிலில் கொள்ளை

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த தபால் ரயிலில் வந்த மூவருக்கு மயக்கமருந்து கலந்த ரொட்டியைக் கொடுத்து அவர்களிடமிருந்த பணம், நகை என்பன அபகரிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐ.அனீஸ் வயது 32, ஏ.றுபிஸா வயது29, ஐ.இன்ஸா வயது 15 ஆகிய மூவரும் கொழும்பு கிறான்பாஸில் இருந்து கிளிநொச்சிக்கு புதன்கிழமை...

பாப்பரசர் முதல் தடவையாக தமிழில் ஆசிச்செய்தி

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் முதல் தடவையாக தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இலங்கை மக்களுக்கு தமிழ் மொழியில் ஆசிச்செய்தி வெளியிட்டுள்ளார். பாப்பரசர் இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்டு நேற்றுக் காலை கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகப் பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணமானார். அதற்கு முன்னதாக அவர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இறைவன்...

பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவ செயற்றிட்டங்கள்

யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவ செயற்றிட்டங்களை முன்னெடுக்க 525 தொண்டர்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்ட ரீதியில் 21 பாடசாலைகளில் 525 தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 03 கட்டங்களாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவத்துக்கு...
Loading posts...

All posts loaded

No more posts