மாகாண சபையில் கைபேசி பாவிக்க தடை

வடக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் அவைக்குள் மாகாணசபை உறுப்பினர்கள் கைபேசியை பாவிக்க முடியாது என அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண சபை அவைக்கு இருக்கவேண்டிய ஒழுங்கு விதிகளை கருத்திற் கொண்டே இதனை இன்றிலிருந்து நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தூய நீருக்காக திரண்டனர் மக்கள்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் இன்று காலை 10மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூய குடிநீருக்காக திரண்ட யாழ்ப்பாண மக்களின் கோரிக்கைகள் வருமாறு, பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் நீர்...
Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கான கூட்டணி மாத்திரமே! – டக்ளஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே கூறி வருகின்றனர். கூட்டமைப்பு பதிவு செய்வதில் தடைகள் இருப்பதாக அதன் தலைவர் கூறுகிறார். தடையாக இருப்பவர்கள் யார்? எனக் கேள்வி எழுப்பகின்றார் அதன் பேச்சாளர். இன்னொருவர் கனடாவில் சென்று கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஆதரவு தேடுகிறார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை...

யார் எதிர்கட்சித் தலைவர் என்பது இன்று தெரியவரும்

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் இன்றையதினம் இது தொடர்பில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்பப்படுகிறது. தற்போது எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கும் நிமல் சிறிபால.டி.சில் வாவுக்கா, அல்லது...

கைவிடப்பட்ட காணியிலிருந்து சடலம் மீட்பு

சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதியிலுள்ள கைவிடப்பட்ட காணியில் இருந்து ஆணொருவரின் சடலம் திங்கட்கிழமை (06) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். காணிக்குள் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

ஆட்சிமாற்றத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டவை நடைமுறையில் இல்லை

ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை, நடைமுறையில் காண முடியாதுள்ளது என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடியிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் - வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று, முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு...

மூத்த அறிவிப்பாளர் கமிலினி செல்வராஜன் காலமானார்

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும் ஒளி, ஒலிபரப்பாளரும் நாடக கலைஞருமான கமலினி செல்வராஜன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். இவர், காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியாவார்.

உடையார்கட்டில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்!

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றுமன்தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர். இந்நிலையில்...

எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கு அறிவிக்கப்படின் செயற்படுவோம்

எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு எமக்கு முறையாக அறிவிக்கப்பட்டால், நாம் உண்மையாக செயற்படுவோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையகக் கட்சிகள் எமக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை அழைத்து கலந்துரையாடியமை...

சுனாமியிலேயே பிரபாகரன் மரணித்தார்

தன்னை மஹா பராக்கிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார். தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார். பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட...

வலி.கிழக்கு பிரதேச சபை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி, வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை பணியாளர்கள் 10 பேர், திங்கட்கிழமை(06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சுகாதார, பாதுகாப்பு மற்றும் நூலக மேற்பார்வை பணியாளர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட தாங்கள் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அமைய அடிப்படையில் பணியாற்றி...

யாழ்.ஆயரை சந்தித்தார் ஆஸி. உயர்ஸ்தானிகர்

தங்களுக்கு இராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரூபின் மூடியிடம், யாழ். மறைவமாட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். உயர்ஸ்தானிகருக்கும் யாழ். ஆயருக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ்.ஆயர் இல்லத்தில் திங்கட்கிழமை (06), நடைபெற்றது. இந்த சந்திப்பு...

வடபகுதி நிதியே மகிந்தவின் மாளிகை! – விஜயகலா

மகிந்த அரசு அபிவிருத்தி என்று சொல்லி வீதிகளையும் கட்டடங்களையும் கட்டியுள்ளார்களே தவிர போரால் அங்கவீனமானவர்களுக்கோ விதவைகள் ஆக்கப்பட்டவர்களுக்கோ எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அத்தோடு வடபகுதிக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போய்விட்டது கே.கே.எஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்கு தான் செலவளிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில்...

பெற்றோர்கள் தொலைக்காட்சிக்குள் மூழ்கி பிள்ளைகளின் கல்வியை நாசம் செய்கின்றனர்

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் பெரும் தடையாகவுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் ஒருநாளில், அரைவாசிக்கு மேற்பட்ட பொழுதை தொலைக்காட்சியுடன் செலவிடுகின்றார்கள். தம் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அக்கறை அற்றவர்களாக தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மூழ்கி விடுகின்றனர் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா தெரிவித்தார். இணுவில் பொது நூலகம்...

யாழ். மாவட்டத்தில் உணவினால் ஏற்படும் நோய் அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் உணவிலிருந்து ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 25 வீதம் தொடக்கம் 30 வீதம் வரையில் 2014ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கம் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தது. உலக சுகாதார தினம் 7ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தின்...

செயலாளர்களின் மாற்றல், இடைநிறுத்தம் தொடர்பில் சிபார்சு செய்யவில்லை

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களின் அமைச்சு மாற்றல்கள் தொடர்பாக அவற்றை இடைநிறுத்தவோ மாற்றம் செய்யவோ நான் எந்த சிபார்சும் செய்யவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் எனக்கூறி, ஒப்பமிடாது தமது குறைபாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய மனுவின் பிரதியொன்று எனக்கும் கிடைக்கப்பெற்றது. எனது...

நாயை கட்டி வளர்க்காத உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு

யாழ். தம்பானை நாச்சிமார் கோவில் வீதியிலுள்ள வீட்டுக்காரருக்கு எதிராக 75 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை (05) விசித்திர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் சென்ற தன்னை மேற்படி பகுதியிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்து விட்டதாகவும், அது தொடர்பில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி முறைப்பாட்டை பதிவு...

மதுபோதையால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன

கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 2013ஆண்டை விட, 2014ஆம் ஆண்டு, 25 சதவீதம் விபத்துக்கள் அதிகரித்துக் காணப்பட்டிருந்தது. இதற்கான முக்கிய காரணமாக மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையே என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க.என்.பண்டார, ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 2014ஆம் ஆண்டு 5 பேர் விபத்துக்களினால் இறந்துள்ளதுடன், 14...

யோசித்தவின் பயிற்சிக்கு 210 இலட்சம் ரூபாய் செலவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் நீக்கப்பட்டார். ஜனாதிபதி பாதுகாப்பாளராக அவருக்கு அந்தளவுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்துகொள்வதற்கான நடைமுறைகள்...

நீரை மக்கள் குடிக்கலாமா? கூடாதா? – நாளை பேரணி

கழிவு நீர் மாசடைதலினால், பல்வேறு தரப்பினரிடமும் உதவிக்காக அணுகிய போதும், குறைந்த பட்ச ஜனநாயக உரிமை கிடைக்கவில்லை என கோரி, மக்கள் பேரணி ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் மற்றும் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் விதை குழுமம் ஆகியன இணைந்து, இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்....
Loading posts...

All posts loaded

No more posts