Ad Widget

ரக்னா லங்கா உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிப்பு

லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடட், ரக்னா பாதுகாப்பு லிமிடட், இராணுவ சேவை அதிகார சபை மற்றும் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களும் பணிப்பாளர் சபையும் நியமிக்கப்பட்டுள்ளது.

1757906862he

நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உரியவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

அதன் விபரம் வருமாறு,

01.லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி லிமிடட் – தலைவர் அசங்க தொடங்வெல. பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் – உதய அபேசேகர, அசேல இத்தவெல, ரூபன் விக்ரமாராச்சி, சசிமாலி திஸாநாயக்க.

02.ரக்னா பாதுகாப்பு லிமிடட் – விக்டர் சமரவீர – தலைவர். பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் – ஜயந்த தனபால, ஏ.ஏ.விக்ரமசிங்க, தர்மசேன ஹப்புதந்திரி, சரத் ஜயதிலக.

03.இராணுவ சேவை அதிகார சபை – பணிப்பாளர் சபை உறுப்பினர் – பி.ஜி.நில்மினி பெரேரா, நிமல் பெனாண்டோ, சிறிகல் வி சில்வா.

04.தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு – பணிப்பாளர் சபை உறுப்பினர் – கே.எம்.பராக்கிரம ராஜ் கருணாரத்ன.

Related Posts