Ad Widget

மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு உதவ அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வர வேண்டும்!

ஏற்கனவே மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள பகுதிகளில் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் இருக்கின்றன. அதே நேரம், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் தங்களது வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளனர்.

இடம்பெயர்ந்த நிலையில், பல வருட காலமாக, பல்வேறு இடங்களில், தற்காலிக நிலையில் வாழ்ந்து வந்த இம் மக்கள் வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்தவர்கள் அல்லர்.

எனவே, தங்களது வாழ்க்கையை இம் மக்கள் புதிதாக ஆரம்பிப்பதற்கு ஏதுவான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வர வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Related Posts