புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கியுள்ளனர்!– திவயின

புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கியுள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவ்வாற சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.ஐம்பது மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம்! நோர்வே கவலை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நோர்வேயின் தூதுவர் கிரிட் லொசென் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அண்மையில் சந்தித்த போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

பொலிஸாரினால் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிகள்

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் நால்வரும் விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 27ம் திகதியின் பின்னர் யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைதுகளின் ஒரு பாகமாக Read more »

கூட்டமைப்பின் அமைப்பாளர் வீட்டில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் உண்மையில்லை: யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கை குண்டுவீச்சு தாக்குதல் உண்மையல்ல என யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கின்றார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் என்பவரின் நல்லூரடியிலுள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு... Read more »

4 மாணவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர்: கோட்டாபய

வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் Read more »

பல்கலை மாணவியின் மரணத்தில் சந்தேகம்

சுன்னாகம் பகுதி வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகமிருப்பதனால் வயிற்றின் சிறுபகுதி கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி இன்று தெரிவித்தார். Read more »

திடீரென அதிகரித்தது பெற்றோல் விலை

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுவரை காலமும் 149 ரூபாவாக இருந்த பெற்றொல் புதிய விலையின் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் (ஒக்டெயின் 90) விலை 159 ரூபா ஆகும் Read more »

2013இல் பட்டதாரிகள் 25 பேருக்கு மீன்பிடி பரிசோதகர் நியமனம்; ராஜித யாழில் தெரிவிப்பு

2013 ஆம் ஆண்டு 25 பட்டதாரிகளுக்கு மீன்பிடி பரிசோதகர்களுக்கான நியமனத்தினை கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று யாழில் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்ட ஐஸ்தொழிற்சாலையினை திறந்து வைக்கும் நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்டு Read more »

வடமாகாண ஆசிரியர் இடமாற்றம் ரத்து

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் வடமாகாண ஆளுநரினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மாகாண கல்வி அமைச்சினால் யாழ். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி வலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்ற பெயர் பட்டியலில் Read more »

யாழில் சில இடங்களில் மின்தடை

“சுன்னாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் அனல் மின்நிலையம் ஜனவரி மாதம் இயக்கப்பட வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்ட சில இடங்களிற்கு மின்விநியோகம் தடைப்படும்” என்று யாழ் பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். Read more »

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடை; யாழில் நீரியல் வளத்துறை அமைச்சர் தெரிவிப்பு

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடையாக இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் புதிதான அமைக்கப்பட ஐஸ் கட்டித் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். Read more »

வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்தால் தொடவேண்டாம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.வானிலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் Read more »

இணுவிலில் இளைஞன் கடத்தல்

முச்சக்கரவண்டியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இணுவில் சந்தியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.இந்த சம்பவம் நேற்றிரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Read more »

மழை பெய்யாவிட்டால் நெற்பயிருக்கு பாதிப்பு

வறட்சி காரணமாகத் தாழ்ந்த வயல்களில் தண்ணீர் வற்றி அவை சதுப்பு நிலமாகவே காணப்படுகின்றன.இன்னும் ஒருவார காலத்துக்குள் மழை பெய்யாவிட்டால் குடாநாட்டில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்படும் என விவசாயத் திணைக்கள அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார். Read more »

வெலிக்கந்த முகாமில் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களை பார்வையிட்டனர்! இன்று கோத்தாவுடன் சந்திப்பு

யாழ். பல்கலை மாணவர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு யாழ். பல்கலை மூன்று பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் நேற்று சென்று அவர்களைப் பார்வையிட்டதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.விக்னேஸ்வரன் தெரிவித்தார். Read more »

யாழ். பல்கலை மாணவியர் மூவர் விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.வெள்ளிக்கிழமை (இன்று), இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக Read more »

யாழ்.பல்கலை மாணவி மர்மமான முறையில் மரணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் வியாழக்கிழமை மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவியே மர்மனான முறையில் மரணமடைந்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்… Read more »

மனித உரிமைகள் தினம் யாழில்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று யாழில் அனுஷ;டிக்கப்பட்டது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. Read more »

சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் நிறைவு

மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்திற்கொண்டு 2 கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவனினால் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. Read more »

லலித், குகன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரின் வழக்கு விசாரணைகளை 2013 ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை கண்டித்து யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை Read more »