வடக்கின் வீதி இணைப்புக்கு 498 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

வட மாகாணத்திலுள்ள வீதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ், வீதிகளை புனரமைப்புச் செய்வதற்காக 498 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் புதன்கிழமை (18) தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைபெறுகின்றது. 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத்...

 யாழ். உயர்பாதுகாப்பு வலய காணிகளை ஜனாதிபதி கையளிப்பார்

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படும் 450 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர் எதிர்வரும் திங்கட்கிழமை (23) கையளிக்கவுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, அக்காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஜனாதிபதியும் பிரதமரும் கையளிப்பார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்தார்....
Ad Widget

கிளிநொச்சி விபத்தில் முதியவர் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிப்போ சந்தி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில், கிளிநொச்சி ஆனந்த நகரைச்சேர்ந்த 75வயதான அப்பன் நல்லத்தம்பி என்பவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகபுரத்தை நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டியும் டிப்போ சந்தியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. புதன்கிழமை இரவு...

ரவிராஜ் கொலை வழக்கு: மூவரையும் சி.ஐ.டியில் தடுத்து வைக்க அனுமதி

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான முனசிங்க உட்பட கடற்படை அதிகாரிகள் மூவரையும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரையிலும் குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைப்பதற்கு கொழும்பு நீதவான் அனுமதியளித்தார். ரவிராஜ் எம்.பி.யும்...

மணல் அகழ்வை தடுக்க எவரும் முன்வரவில்லை வளலாய் மக்கள் குற்றஞ்சாட்டு

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு எந்த வொரு தரப்பினரும் முன்வருகின்றார்கள் இல்லை என்று வளலாய் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 25 ஆண்டு காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப் பட்ட வளலாய் பிரதேசத்தில் இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர் என்று அந்த மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை வளலாய் கிராம...

மல்லாகம் நீதவானாக கறுப்பையா ஜீவராணி நியமனம்

மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானாக கறுப்பையா ஜீவராணி நியமிக்கப்பட்டுள்ளாலர்.இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவனாக கடமையாற்றிய அவர், நீதி அமைச்சின் பரிந்துரைக்கு அமைய, இன்று புதன்கிழமை (18) முதல் அமுலுக்கும் வரும் வகையில் இந்த நியமனத்தை பெற்றுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய திருமதி ஜோய் மகிழ்மகாதேவன்,...

“ரொடா” வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்!

நாடு பூராவும் ரொடா வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இக்காய்ச்சல் கண்டவர்கள் பெரசிட்டமோல் மருந்தைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளக் கூடாது எனவும், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலுக்கு உட்பட்டவர்கள் அவசரமாக வைத்திய நிபுணர்களைச் சந்திக்கும்படியும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வாந்தி, தலைவலி, கடும்காய்ச்சல், மலம் கழிக்கும்போது அல்லது வாந்தியெடுக்கும்போது இரத்தம்...

3 நாள் பயணமான இந்தியா சென்றார் சரத் பொன்சேகா!

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இன்று அவர், அரசியல் கட்சித் தலைவர்கள் புலனாய்வுப் பிரிவின் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. 20ஆம் திகதி அவர் இலங்கை திரும்புவார்.

தொண்டமானாறில் சுவிஸ் வெளிவிகார அமைச்சரால் வீட்டுத் திட்டம் கையளிப்பு

சுவிஸ் அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இன்று புதன்கிழமை சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்தார். தொண்டமானாறு, அக்கரைப்பகுதியில் இந்த வீட்டுத்திட்டம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுவிஸ் அதிகாரிகள் ஹலோட்ரஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறைக்கு கரையோர வீதி அமைக்க தீர்மானம்!

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை வரையான கரையோர வீதி அமைக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானம் வடமாகாண சபையில் நேற்று ஏக மனதாக நிறைவேற்றப் பட்டது. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த பிரேரணையை நேற்றுச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். கிழக்கு மாகாணம் திருகோணமலையிலிருந்து கொக்கிளாய் ஆற்றினூடாக அமைக்கப்பட இருக்கும் பாலத்தினூடான கரையோரப் பாதையானது, முல்லைத்தீவு நகர் வரையிலும் பின்னர்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர் உயிரிழந்தார்

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர், செவ்வாய்க்கிழமை(17) மாலையில் உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 15ஆவது கஜபா றெஜிமென்ட் படைப்பிரிவை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் வசந்தகுமார (வயது 35) என்பவரே உயிரிழந்தார். கடந்த 15ஆம் திகதி விடுமுறையில் செல்ல கொடிகாமம் புகையிரத நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்த இவரை, பின்னால் வந்த வாகனமொன்று...

வடக்கு முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாய் பகுதிக்கு விஜயம்

வடமாகாண முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாயில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (17.03.2015) சென்று,மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இராணுவத்தால் முகாம்களை அமைப்பதற்கு எனவும், உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கெனவும் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்கக் கோரிஇடம்பெயர்ந்த மக்கள் பல தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக வலிகிழக்கு...

வடக்கின் மிதிவெடிகள் அகற்றுவதற்கு ஜப்பான் ரூ. 164 மில்லியன் உதவி

இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளுக்கென ஜப்பான் 164 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. ஜப்பான் அரசு இலங்கை மனிதவள பாதுகாப்பு திட்டத்துக்கு மானியமாக 12 லட்சத்து 66,738 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ‘MAG (Mines Advisory Groups) மக்’ நிறுவனத்தினால் செயற்படுத்தப்படும் மன்னார் மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றுதலின் மூலம் மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி செய்யும்...

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். தேசிய நிறைவேற்றுச் சபையின் நேற்றைய கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். நேற்றைய கூட்டம்...

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் மூவரையும் விடுவிக்க நடவடிக்கை!

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் மூவரையும் அதிலிருந்து விடுதலை செய்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும், இது விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதியின் விசேட தூதுவராக அங்கு செல்வதற்கு அமைச்சர் ஹக்கீம் தயார் நிலையிலேயே இருக்கின்றார் என்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்....

வலி.வடக்கில் 400 ஏக்கரில் எதிர்வரும் 23 ஆம் திகதி மீள்குடியேற்றம்! ஆரம்பிக்க ஜனாதிபதியும் பிரதமரும் வருகை

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய பகுதியில் 1000 ஏக்கரை விடுவிப்பது என்ற அறிவிப்பின் படி முதற்கட்டமாக 400 ஏக்கரை விடுவித்து, அதில் மக்களை மீளக்குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கலந்துகொள்வர். -...

மீள்குடியேறும் மக்களுக்குரிய அவசர தேவைகள் பூர்த்தி

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது விடுவிக்கப்பட்டு, மீள்குடியேற்றத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவு மக்கள் விடுத்த அவசர கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வளலாயில் தமது காணிகளை துப்புரவு...

வடமாகாண சபை பேரவை செயலகத்துக்கு இணையத்தளம்: பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாண சபையின் செயற்பாடுகளை வெளியிடக்கூடிய வகையில் வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்துக்கு தனியான இணையத்தளம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை(17) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, அவைத்தலைவர் இந்த பிரேரணை...

விபத்தில் இருவர் மரணம்

கிளிநொச்சி, புதுக்காட்டுச் சந்தியில் இன்று புதன்கிழமை (18) அதிகாலை பாரவூர்தியொன்று மரத்துடன் மோதியதால், பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். பாரவூர்தியின் உரிமையாளரும் சாரதியுமான இரத்தினசிங்கம் தர்மசிங்கம் (வயது 51), ஆவரங்காலைச் சேர்ந்த தெய்வம் ரங்கநாதன் (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு...

துணைவேந்தர் விவகாரத்தால் சிக்கல்நிலை

யாழ்ப்பாணம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது என்று பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தரை நீக்குமாறு விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பிரபாத் ஜய சிங்க தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முறையாக...
Loading posts...

All posts loaded

No more posts