யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் அராலிப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் 26,29 வயதுடையவர்கள் என்றும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தால் களவாடப்பட்ட 10 துவிச்சக்கர வண்டிகளை யாழ்ப்பாண பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.