19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள 19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள்,கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகாரங்கள் சிலவற்றை குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 19ஆவது திருத்தத்துக்காக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தத்துக்கே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

19ஆவது திருத்தத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்து, அதுதொடர்பில் சபாநாயகருக்கும் அறிவித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித்தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளனர்.

Related Posts