- Tuesday
- May 12th, 2026
மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அகுரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஆதரவாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் கையினைப் பிடிக்க முற்பட்ட போது,...
கொலைக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு தேர்தல் காலத்தில் பிணை வழங்குவது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும் எனக் கூறி, பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைப்படி விளக்கமறியலில் இருந்து வரும் இரண்டு சந்தேக நபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து கட்டளை பிறப்பித்துள்ளார். சின்னத்தம்பி திருச்செல்வம் என்ற நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்...
வவுனியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - சட்டவிரோதக் கருக்கலைப்புச் செய்தபோது ஏற்பட்ட அதிகரித்த இரத்த போக்கு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார்....
மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரைக் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக, யாழ். பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். யாழ். நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் யூட் றொசான் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த மாதம் 15ம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஊசி போடுவதற்காக பெற்றோருடன் சென்ற நபர்,...
மிரிஹான பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வேனின் இலக்கம் போலியானது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திர வர்த்த வலையங்கள் அமைத்து நகரங்களில் தொழில்பேட்டை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். - இவ்வாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் பிரசாரக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை நகர பஸ்நிலையம் முன்பாக நடைபெற்றது....
மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த படையினர் மூவரும் நீதிமன்றினால் நேற்றுமாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் மீரிஹான பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். சிவில் உடையில் இருந்த இவர்களிடம் இருந்து ஒரு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும்...
இந்த நாட்டை ஆள மீண்டும் மஹிந்தவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:- நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். கடந்த ஜனவரி 8ஆம் திகதி வெற்றிகொண்ட ஜனநாயகத்தைத் தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை அளிக்க இடமளித்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், ஜனநாயகத்தை சிறப்பாக ஏற்படுத்தியதனாலேயே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு செய்திருக்காமல் சர்வாதிகாரியாக இருந்திருந்தால்...
வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் சொந்த இடங்களில் ஒரு சிறிய தொகுதியை விடுவிக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது. கீரிமாலை நகுலேஸ்வரம் பகுதியில் உள்ள மக்களுடைய சில வீடுகள் உள்ளடங்கிய வசாவிளானில் இருந்து வளலாய் வரைச் செல்லும் செமன்றி வீதி, சாந்தைச் சந்தியுடன் தொடுகையுறும் வீதிகள் மற்றும் அதனை அண்மித்த 27...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவேண்டும் என்று கூறியே நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன். இத்தகைய நிலையில் எனக்கு மஹிந்த ராஜபக்ஷவினால் பணம் தரப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தாவால் கூறப்படுவதில் எந்தளவுக்கு உணமை உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் இவ்வாறு...
17ஆவது சர்வதேச புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கான புகைப்படங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியுடன் ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடையவுள்ளமையினால் உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை தேசிய புகைப்படச்சங்கம் வேண்டுகோள் விடுத்துளள்து. ஓகஸ்ட் 19ஆம் திகதி தேசிய மற்றும் சர்வதேச தெரிவுக்குழுவினர் அடங்கிய குழுவினால் படங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன. கண்காட்சி எதிர்வரும்...
மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர்கள் எனக் கூறப்படும் இராணுவ வீரர்கள் மூவர் மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஹான பகுதியில் பயணித்த வேன் ஒன்றில் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாணைகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 07.30 அளவில் குறித்த வேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப்...
முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தங்கியிருக்கும் மிரிஹான பகுதியில், வௌ்ளை வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றியதாக தகவல் கிடைத்துள்ளது என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். போலி இலக்கத் தகடு பதிக்கப்பட்ட குறித்த வேனை நேற்று முன்தினம் இரவு கைப்பற்றியுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன்...
ஜனநாயக வழிமுறையின் ஊடாகத்தான் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணையில் நேற்றய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அறுபது வருடகாலமாக ஏமாற்றப்பட்டு வந்த...
வடமாகாண சபையால் யூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு பனை அபிவிருத்தி வாரத் தொடக்கமான இன்று புதன்கிழமையில் இருந்து இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணக் கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை...
சர்வதேச ரீதியான நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை முழுமையாக பாதுகாக்கும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுவருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் கோவிந்தன் வீதியில் சனிக்கிழமை அகில இலங்கை தமிழ்காங்கிரசின் அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு...
தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக மதவழிபாட்டுத்தலங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மதவழிபாட்டு தலங்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தெரியவருகின்றது. ஓருவர் 1981ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின்படி இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் ஓருவர் குற்றவாளி...
வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் எங்களது தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு ஏனைய இனங்களைப் போல் சகல உரிமைகளுடனும் தமிழர்கள் வாழ வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்கத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த...
Loading posts...
All posts loaded
No more posts
