- Friday
- November 21st, 2025
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் சாட்சியளிக்கவுள்ளார். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து வீடியோ கோன்பரன்ஸிங் (video conferencing) மூலம் அவர் குறித்த சாட்சியத்தை அளிக்கவுள்ளார். 1987ம் ஆண்டு இந்தியாவின் சென்னை - சூளைமேடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக...
வடமாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒரு லட்சத்துக்குக் கிட்டிய எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 24 மணி நேர அவகாசத்தில் விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்...
சுன்னாகம் நகரப் பகுதியில் மாணவர்கள் இருவரை, பியர் போத்தலால் வெட்டிய சந்தேகநபர்களில் பிரதான சந்தேகநபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு...
பருத்தித்துறை, நாகர்கோவில் கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள், திங்கட்கிழமை (26) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம், மிருசுவில் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜா ஜோன் அஜித் (வயது 21), சண்முகசிங்கம் டினா (வயது 21) ஆகிய இருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மீன் வாங்கச்செல்வதாக கூறி நண்பரிடம் மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு கடலில்...
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 34 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணக் கடற்பரப்பில் வைத்து செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களும்,...
இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்று விசாரைணகளை நடத்தி வருகின்றது என்றும், இந்த விசாரணைகளை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் கண்காணித்து வருகின்றார் என்றும் காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலும் போர்க்குற்றங்கள் சம்பந்தமாகவும் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்....
நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தப் பொருள் சுமார் 7 அடி அளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள் என்னவென்பது தொடர்பில் முதலில் கண்டறியப்படாத நிலையில் பின்னர் வானியலாளர்கள் அது...
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், நீதி ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டு வன்புணர்வின் பின்னரான படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
கருணா அம்மான எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவிவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன், ஆனந்தசங்கிரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இனிவரும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன்...
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடத்தப்பட இருக்கின்ற விசாரணை சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது....
இலங்கையின் இலவசக் கல்வி மூலம் பட்டம் பெற்றபின் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுபவர்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கிருந்து குரல் கொடுப்பதைவிட, இங்கு வந்து அவர்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார். யாழ் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியர்கைளப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில்...
மன்னார் மறை மாவட்டத்திலுள்ள பறப்பாங்கண்டல் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த திவ்விய நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயத்தை அடுத்து அது கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக உரோமாபுரிக்கு எடுத்துச் செல்லப்படலாம் எனவும் நம்பப்படுகின்றது. மன்னார் மறை மாவட்டத்திலுள்ள பறப்பாங்கண்டல் பங்கில் அமைந்துள்ள திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த...
துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட தனது மகள் குறித்து எவருக்கும் அக்கறை கிடையாது என சேயா சதெவ்மியின் தந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தொடர்பில் சட்டத்தரணிகள் தீவிர அக்கறை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது மகளின் படுகொலை தொடர்பில் கைது செய்து விடுவிக்கப்பட்ட கொண்டயா...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட மாநாடு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்ற நிலையில் பிரதமர் தலைமையி லான இன்றைய மாநாடு தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளும் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜெனிவா பிரேரணை சம்பந்தமான விவாதத்தை தான் புறக்கணிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்றைய தினம் தனக்கிருந்த தனிப்பட்ட காரணமொன்றிற்காக அந்த விவாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரனையில் பயங்கரமான விடயங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில்...
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகையில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுகைசெய்து பராமரிக்கும் பொது அமைப்புகளுக்கு, பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வழங்கப்படும் உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர்பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சனசமூக நிலையங்கள், மாதர் அமைப்புகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற...
நடந்து முடிந்த உயர்தர பரீட்ச்சை பெறுபேறுகளின் படி பல்கலை கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதிச் சான்றிதழ் அண்மையில் கிடைக்கபெற்றிருக்கும். இதன் படி தெரிவான மாணவர்களுக்கு முதற் கண் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை பல்கலைக்கழகத்துக்கான தெரிவானது மிகவும் போட்டி மிக்கது. ஆதலால் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைவது கடினம். இவ்வாறான மாணவர்களுக்கு அரசு,...
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு - பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம்...
முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வயதெல்லையை 25 ஆக மட்டுப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில், தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை முன்வைத்த யோசனைக்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனூடாக எதிர்பார்த்த பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடியாது என சங்கத்தின் செயலாளர் ரி.ஆர்.ஆர்.பள்ளி எமது செய்திச் சேவைக்குத்...
Loading posts...
All posts loaded
No more posts
