மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன், பொது மக்களின் உதவி கோரி யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் ஊடக...

வடக்கு விவசாய அமைச்சால் மண்வளம் தொடர்பாக விசேட கருத்தமர்வு

ஆண்டுதோறும் டிசம்பர் 5ஆம் திகதி உலக மண் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைக் கடைப்பிடிக்கும் நோக்குடன், வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஒருநாள் விசேட கருத்தமர்வு ஒன்றை நாளை சனிக்கிழமை (05.12.2015) யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியின் சங்கிலியன் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. ‘மண் - உயிர் வாழ்வதற்கான திடமான தளம்’ என்ற கருப்பொருளில் நிகழவுள்ள...
Ad Widget

யாழில் அதிகரிக்கும் தொற்று நோய்கள் : மக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

யாழில் டெங்கு காய்ச்சல் , வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் உண்ணிக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, இவை தொடர்பில் சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வருடத்தில் இதுவரை இந்நான்கு தொற்று நோய்களினால் ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்ச...

கூட்டமைப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்ற வழக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்திலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகள் கனடா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து...

வீட்டுத்திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டு பொய்! – இந்திய அரசு

இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் ராஜசபாவில் இந்த விடயம் நேற்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடு அடிப்படையற்றது என்று நேற்று இந்திய...

வடக்கில் 6000 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயார்!

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த பொது மக்களின் காணிகளை...

இராணுவ வீரர்களுக்கிடையில் மோதல்; ஒருவருக்கு காது அறுக்கப்பட்டது

காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று வியாழக்கிழமை (03) இராணுவ சிப்பாய்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்ற சிப்பாய், காது அறுப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இருவர் சிறு காயங்களுடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று சிப்பாய்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில்...

சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – பாராளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி.

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில்...

அரியாலை பகுதியில் பெண் தற்கொலை

அரியாலை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 48 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். – கிளி. ஒருங்கிணைப்பு குழு தலைவராக விஜயகலா நியமனம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சருக்கு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இவரது தலைமையிலேயே இடம்பெறவுள்ளது....

4 பசுக்கள் நசுங்கிப் பலி

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகள் மீது மோதியதில் நான்கு பசு மாடுகள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்று காலை யாழ்.பொம்மை வெளிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஓட்டு மடம் பகுதியினூடாக பேருந்து சேவையிலீடுபடும் போக்குவரத்து வீதியில் நேற்று காலை சுமார் பத்திற்கு மேற்பட்ட மாடுகள்...

மண்டைதீவிலும் மனித புதைகுழி : அகழ்வுக்கு உட்படுத்துமாறு சபையில் சிறிதரன் எம்.பி வலியுறுத்து

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைதீவு, செம்மன்தோட்ட காணிக் கிணறுகளிலும் மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது. இவற்றை அகழ்வுக்குட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர்,...

முஸ்லீம் லீக் யாழ். மாவட்டக் கிளை தெரிவு

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக ஐ.எஸ்.நிராஸ், செயலாளராக என்.எம்.றிஸ்வி, பொருளாலராக எம்.மகனாஸ், பிரதித் தலைவராக எம்.எஸ்.ஜாபிர், பிரதி செயலாளராக எம்.றிஸ்வான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் அமைந்துள்ள காரியாலத்தில் நடைபெற்ற...

கடற்படை பஸ் மோதி மாணவி பலி

வேலணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை கடற்படையினரின் பஸ் மோதி, மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வேலணை நாரந்தனை பகுதியைச் சேர்ந்த நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் உதயகுமார் உசாந்தினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். பஸ் சாரதி, ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக...

வைத்திய அதிகாரிகள் சங்கப் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

நாடு தழுவிய ரீதியில் வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று காலை முதல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளின் கீழ் வைத்தியர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த போராட்டத்தை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்கின்றமைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொள்வதற்கு...

சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை

எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது...

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வட மாகாண சபை பாடுபடும்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வட மாகாண சபை தொடர்ந்தும் பாடுபடும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொடிய யுத்தம் விட்டுச்சென்ற வடுக்களில் மிகமோசமானது பலருக்கு வலுவிழப்பை ஏற்படுத்தியமையாகும். துப்பாக்கி பிரயோகம், எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல்,...

வடமாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு முறைப்பாடு

நிதிப் பிரமாணக் கோவைகளிற்கு முரணாக வடக்கு மாகாண சபையினால் நிதி கையாளப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்திற்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரினால் கடிதம் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Joule Power மற்றும் Beta Power ஆகிய நிறுவனங்களுடன் வடக்கு மாகாண சபை பளை பிரதேசத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி...

இலங்கை அகதி தற்கொலை முயற்சி

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை முகாமில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 20 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தங்களை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்திய 20 பேரில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு தாமதமின்றி பொதுமன்னிப்பு வழங்குக! – சம்பந்தன்

"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதில் சட்டப்பிரச்சினை இல்லை. அரசியல் பிரச்சினையே உள்ளது. எனவே, இதை நீடித்துக்கொண்டுசெல்ல இடமளிக்கமாட்டோம்'' என்று நாடாளுமன்றில் உறுதியாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள்...
Loading posts...

All posts loaded

No more posts