Ad Widget

கேட்பதைச் செய்தாலே நல்லிணக்கம் ஏற்படுத்தலாம்

எங்களுடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட்டு நடந்துகொண்டாலே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என தென்னாபிரிக்க அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் தொண்டர் நிறுவனங்களுக்கு தெரிவித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தென்னாபிரிக்க சென்று அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அவர்களின் சந்திப்புத் தொடர்பில் அனந்தியிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘வடக்கிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுதல், காணிகள் விடுவித்தல் மற்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட ஒவ்வொரு விடயங்களையும் சீராகச் செய்யும் பட்சத்தில் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென அவர்களுக்கு தெரியப்படுத்தினோம்’ என்றார்.

அத்துடன், ‘எமது இந்தச் சந்திப்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் கலந்துகொண்டதுடன், அவர்களும் இதனையே வலியுறுத்தினர். நாங்கள் பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கின்றோம் எங்களுக்கு நிவாரணம் மற்றும் பாதுகாப்பு எல்லாம் அரசாங்கம் தரவேண்டும்’ என்றார்.

மேலும், ‘போர்க்குற்ற விசாரணையின் போது, சாட்சியங்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது. சாட்சியங்கள் தங்கள் பாதுகாப்பு காரணமாக சாட்சி செல்ல மாட்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினோம்’ என்றார்.

Related Posts