- Friday
- August 7th, 2026
இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82, அமிர்தலிங்கம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து லண்டனில் வசித்து வந்த அவரது மனைவி, மங்கையர்க்கரசி நேற்று முன்தினம் கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், புதன்கிழமை மாலை அவர்...
அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று காலமானார். கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீழே விழுந்து சுகயீனமுற்று சுயநினைவு அற்றநிலையில் நேற்று மாலை அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் 14 அரசியல் கைதிகளையும் தொடர்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்படுவீர்கள் என வடமாகாண ஆளுநா் ரெஜினோல்ட் கூரே, அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று உறுதியளித்த நிலையிலும் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. நீண்டகாலமாக தடுத்து...
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பெண் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு, எதிராக நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள்...
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று நாடு கடத்தப்பட்ட நபரொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 31 வயதான குறித்த நபர், வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு முன்னெடுத்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களை அறிவிக்க மகஸீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே, அவர்கள் இவ்வாறு கூறியதாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை 19 நிமிடங்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மகளிர்தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் “நான் பதவி விலகியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...
மன்னார் பெரியகரிசல் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பெரிய கரிசல் கிராமத்தில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவருகிறது. சந்தேகநபரின் மனைவி வீட்டில் இல்லாத நிலையில், இந்த துஷ்பிரயோக...
தமது விடுதலையை வலியுறு்தி உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஆறு பேரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்திய சாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும். அதுவரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து 14 அரசியல் கைதிகளும் நேற்று போராட்டத்தை தொடர்ந்திருந்தனர். கடந்த சனிக்கிழமை...
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல்போயுள்ளனர் என்றும், அவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான தினேஷ் குணவர்தன எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. கடும் ஆட்சேபனை வெளியிட்டார். அத்துடன்,...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தான் ஏற்பார் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றில் உறுதியளித்தார். இருப்பினும், இந்தக் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியாது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும்...
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்ஹூன் ஹூசைன் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவுக்கு சென்று திரும்புகையில் பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்தார் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் இலங்கையில் ஐயாயிரம் சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்திகளுக்காக நச்சு இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் நிலைமைகள் இதற்கு பிரதான காரணங்களாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு, இந்த...
இந்தியாவில் இடம்பெறவிருக்கும் 'இருபதுக்கு 20' உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இலங்கை கிரிக்கெட் அணியினரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் உடனிருந்தார். 'ஒரே அணி...
உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களது கோரிக்கைகளுக்கு அமைய அந்தந்த பிரிவுகள் குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மெகசீன் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை சந்தித்து விட்டு வடக்கு ஆளுனர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
இலங்கையில் நடந்த போரின் போது, காணாமல் போன மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க கடந்த அரசும் புதிய அரசும் தவறிவிட்டன என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போரின் போது காணாமல்போனோர் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விவாதம், நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வேளையே எதிர்க்கட்சித் தலைவர்...
தகவலறியும் உரிமை தொடர்பான சட்ட மூலத்தை இன்று(8) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த சட்டமூலம் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண சபைகளினதும் அனுமதியைப் பெற்றுள்ளதாக, கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். வட...
2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைப்படி தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை 2 வீதத்தில் இருந்து 4 வீதமாக அதிகரிப்பதனால் அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலம். ஆகவே தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகரிக்கப்பட மாட்டாது.என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். இன்று நாடாளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்திய பிரதமர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து...
சேர்.பொன் இராமநாதன் வீதியை நாச்சிமார் கோவில் வீதி என மாற்றுவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை அனுமதி வழங்கியதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கே.கே.எஸ். வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கும், இவ்வீதியானது, சேர்.பொன் இராமநாதன் வீதி என்ற அழைக்கப்படுகின்றது. இந்நிலையில், அண்மையில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று வீதிகளுக்கான பெயர்ப் பலகைகளை நாட்டியுள்ளது. அதில் சேர்.பொன் இராமநாதன் வீதி...
Loading posts...
All posts loaded
No more posts
