சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்களுக்கு தொடர்புள்ளதாக என்பது பற்றி விசாரிப்பதற்காக இந்திய பொலிஸ் அதிகாரிகள், இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐதராபாத் பொலிஸார் இங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை – இந்தியாவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்கள் இருவருக்கு தொடர்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.