Ad Widget

மீனவர்களை சரமாரியாக வெட்டிய கடற்படை! – இருவர் காயம்

மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் நேற்று கடற்படையினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட இருவரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏ.யூட்சன் டெரன்சியன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

navy-attack-fish-men

மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகு ஒன்றில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

குறித்த மீனவர்கள் 4 பேரும் இரணைதீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காலை 9 மணியளவில் படகு ஒன்றில் வந்த குழுவினர் குறித்த மீனவர்களின் படகிற்கு அருகில் தமது படகினை நிறுத்தியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சுமார் 6 பேர் சிவில் உடையில் முகத்தை மறைத்தவாறும் ஒருவர் கடற்படை சீருடையுடனும் காணப்பட்டுள்ளார். கடற்படையினரின் சீருடையுடன் காணப்பட்ட நபர், குறித்த மீனவர்களின் படகிற்குள் சென்று கதைத்துக் கொண்டிருந்த போது குறித்த மீனவர்களின் படகிற்குள் காணப்பட்ட கத்தியை எடுத்து ஏசுதாசன் அந்தோனி (38) மற்றும் ஜேசு ரஞ்சித் (37) ஆகிய இரு மீனவர்களையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார்.

இதன்போது படகில் இருந்த பேதுரூ இரஞ்சன் (25) மற்றும் ஏ.யூட்சன் டெரன்சியன் (26) ஆகிய இரு மீனவர்களும் கடலில் பாய்ந்துள்ளனர். இந்தநிலையில், காயமடைந்த குறித்த இரு மீனவர்களும் அவர்கள் சென்ற படகில் பள்ளிமுனை கடற்கரையை வந்தடைந்து, கடற்கரையில் காணப்பட்ட சக மீனவர்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடலினுள் இருந்த இரு மீனவர்களையும் கடற்படையினர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts