- Friday
- August 7th, 2026
சந்தேக நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்கான சம்பவமொன்று, திங்கட்கிழமை (07) திக்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரீ.வ.சிவன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கத்திக்குத்துக்கிலக்காகியுள்ளார். குடும்ப பிரச்சினை ஒன்றுடன் தொடர்புபட்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்யச் சென்ற போது, சந்தேகநபருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையில் முரண்பாடு...
அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண பெண்கள் மாற்றத்துக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு ஆகியன இணைந்து பரமேஸ்வரா சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை புலனாய்வாளர்கள் தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர். அத்துடன், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்தனர். இவர்களின் வழமைக்கு மாறான இவ்வாறான செயற்பாட்டால்...
கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக நிலஅளவை செய்வதற்கு, இன்று செவ்வாய்க்கிழமை (08) மேற்கொண்ட நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்தக் காணியை, ஏற்கனவே 3 தடவைகள் நிலஅளவை மேற்கொள்ள எத்தனித்தபோதும், பொதுமக்களின் எதிர்பார்;ப்பால் அந்நடவடிக்கை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதல் தடவையாக தேசிய சமூக வீடியோ கதையாக்கப் போட்டியொன்றை நடத்த இலங்கை அபிவிருத்தி ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது. நோக்கம் பிரதான நிலை ஊடகங்களில் தமது குரலுக்கான உரிய இடமும் பிரதிநிதித்துவமும் கிடைக்காத மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை ஒரே நிமிடத்தில் வீடியோ கதையாக சித்திரிக்கும் இளைஞர் யுவதிகளை அடயாளம் காண்பது இப்போட்டியின் நோக்கமாகும். சமூக ஊடகத்தில்...
‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம்...
யாழ்ப்பாணத்தில் பணப்பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் வெங்காயத்தின் அறுவடைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. அச்சுவேலி பத்தைமேனி விவசாயிகளின் அழைப்பின் பேரில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி. ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோர் அப்பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2016) சென்று வெங்காயச் செய்கையைப் பார்வையிட்டுள்ளனர். அங்கு அமைச்சர்...
தமிழ்மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டமுன் வரைபு தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங் களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டுவருவதும் இதில் மக்கள் மிகவும் உற்சாகத்துடன்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான நவரட்ணராஜா இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சுகவீனமுற்றிருந்தார். இந்நிலையில் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சை பெற யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை இவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற இருந்த நிலையில் அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பினால்...
வடமேல் மாகாணத்துக்குட்பட்ட குளியாபிட்டிய பிரதேசத்தில், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்ற வதந்தியால், பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்பை இழந்திருந்த 6 வயது சிறுவனை, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இச்சிறுவனின் பாடசாலைக் கல்வி வாழ்க்கை முடிவுறும் வரையில், புலமைப் பரிசில் திட்டமொன்றை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை விவசாய அமைச்சரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதியாக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. 'நச்சுத்தன்மையற்ற நாடு' வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
இவ்வருடத்தின் கடந்த இரு மாதகாலத்திற்குள் சுமார் 40 பேருக்கு எயிட்ஸ் தொற்று பரவியுள்ளது என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரசார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 25 - 49 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகமாகவுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் பிரச்சார அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் எல்லைப் பகுதியில் ஒரே நேரத்தில் 6 கடைகள் உடைக்கப்பட்டமை இன ஒற்றுமையைக் குழப்பும் திட்டமிட்ட சதி - நாச வேலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில்...
விடுதலைப் புலிகள் ஆனையிறவு இராணுவ முகாம் மீது ஓயாத அலைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான, சந்தேகநபருக்கு எதிரான வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2000ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் மூலம், ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கிய குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகள்...
யாழ். தெல்லிப்பளை யூனியன் சந்திப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சாவற்காடு - ஆணைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் புவிந்தன் (வயது 21) மற்றும் அரியரட்ணம் அபிராஜ் (வயது 19) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர். கோயிலுக்கு சென்று, மீண்டும் அதிவேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்த இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கில் வீதியை...
வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தனது சுய விருப்பத்துடன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 9 மாதங்களுக்கு முன்பு...
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியில் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உறவுகளை விடுவிக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 7 மணிக்கு முனியப்பர் கோவில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகுதி நிலப்பரப்பு எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 இல் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு தொகுதி காணிகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிகாம...
நாட்டில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை இந்த மாதம் 15ம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தற்போது காணப்படும் வரட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்றும் அதி குறைந்த வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம்...
யாழ் மாவட்டத்தில் கடும் எதிர்ப்புக்களின் மத்தியில் நாளை செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களின்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தும் காணி அளவிடும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் ஏனைய வடக்கு மாகாணங்களிலும் இராணுவத்தின் தேவைக்காக...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவின் உதவியுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் காய்நகர்த்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அவர் அரசாங்கத்தைப் புறம் தள்ளி இந்திய மத்திய அரசுடன் நேரடி உறவு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் மாகாணசபை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு...
Loading posts...
All posts loaded
No more posts
