நெல்லியடி – கொடிகாமம் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மயங்கிக் கிடந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீதியில், கன்கொல்டலை என்னும் இடத்தில் மயங்கிக் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், அப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித விபரங்களும் தெரியாது எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.