- Saturday
- November 22nd, 2025
தமிழ் மக்கள் பேரவையுடனான வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில் தாம் கையெழுத்திடவில்லையென 11 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதென வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றை மாகாண...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டில் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் ஆற்றிய உரை தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களில் மீண்டும் உங்கள் அனைவரையும் இந்த இடத்தில் சந்திப்பதில் தமிழ் மக்கள் பேரவை பெருமகிழ்ச்சி அடைகிறது.அதிலும் குறிப்பாக , எமது மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வரைபு வரைதல் எனும்...
மிரிஹானையில் உள்ள வீட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை முக்கிய பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்தே அவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இலங்கையின் நீதித் துறை பலமாகவும் சிக்கலாகவும் உள்ளதாக கூறிய மகிந்த ராஜபக்ஸ முடியுமான வரை மகனின் விடுதலையை துரிதப் படுத்துவது பிரதானம் எனக் கூறியுள்ளார். யோசித...
வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பகுதியில் மக்களை மீள குடியமர்த்தல் தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளரும் பிரதேச செயலாளர்களும் இணைந்து ஓர் அறிக்கையை சமர்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சனிக்கிழமை (30)...
யாழ்.குடாநாட்டில் புதிய விதத்தில் தலையெடுத்துள்ள கொள்ளை, வழிப்பறிக் கொள்ளை, வீட்டுத்திருட்டுக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும், வழக்கு முடியும் வரையில் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். பெருமளவு போதைவஸ்தை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர்களுக்குப் பிணை கோரி கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த...
மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓடும் இளைஞர்களை, சாராயக் கடைகளுக்கு முன்னாலேயே மடக்கிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றச்செயல்கள், மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் பதிவாகியிருப்பதைச்...
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றதாக கூறி வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளித்தல் மற்றும் தொடர்பை ஏற்படுத்தல் என்பவற்றை தவிர்க்குமாறு தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போலி வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பில் நாட்டின் பல பாகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அந்த...
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை www.doenets.lk...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றார். நேற்று பகல் அவர் அங்கு சென்றதாகவும் இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவது தொடர்பில், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார எம்பி, தனது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மஹிந்த அணி கூட்டாளியும், பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில எம்பிக்கு எடுத்துக்கூறி, தொட்டதற்கெல்லாம் இனவாதம் பேசி, நாட்டை மீண்டும் இனத்துவேஷ குட்டையில் ஆழ்த்த முயல வேண்டாம்...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக மாநாடு இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. மேற்படி மாநாட்டில் இரண்டு விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தௌிவு படுத்தப்பட்டது. முதலாவது யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் ஒரு சில விசாரணைகளை நாடத்தி சர்வதேச மட்டத்தில் இராணுவத்தின் நற்பெயரை...
தமிழ் மக்கள் பேரவை எந்தக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம்பெறாது என வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு உத்தரவாதம் வழங்கியதன் பின்னரே தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு மக்களுக்கு வெளியிடும் நிகழ்வில் கலந்துகொள்கிறேன். தமிழ் மக்கள் புத்திஜீவிகள் தமிழ் மக்கள் சார்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நன்மையளிக்கும் அரசியல் வழிமுறையை முன்வைப்பதனை பிழையான...
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார். தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான...
நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட்ட ஐவரையும் 14 நாட்கள் (எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை...
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபை தமிழ்மக்கள் முன்னிலையில், சம்பிரதாய பூர்வமாக வெளியிடும் நிகழ்வு நாளை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், பெருந் தொகையான...
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள மக்களின் காணிகள் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அவர்களின் காணிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்க தனியான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். இந்தக் குழு ஒரு வாரத்துக்குள் தரவுகளை சேகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்படும் இதன் பின்னர் அவரது பணிப்புக்கு அமைய...
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது. காணாமல் போனவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இக் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர் இக் கலந்துரையாடலில் காணாமல் போனவர்களின் உறவுகள் தமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் யாழ்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் தின நிகழ்வில்...
வடமராட்சி பகுதி துன்னாலை வடக்கு பருத்திதுறை பொலிஸ் பிரிவில் மிகவும் பெரிய பாம்பு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் காணி உரிமையாளன் தனது காணியை துப்பரவு செய்யும் போது 5 மீட்டர் நீளமான பாம்பு அகப்பட்டுள்ளது. அதனை கொல்வதற்கு நீண்ட நேரம் போராடியும் பலன் கிடைக்கவில்லை கடைசியாக அவ்வழியே சென்ற ஒருவரை...
ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர், மற்றமொரு பணியாளரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப் பெண்ணையே அவர் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புஜாராஹ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமிரேட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வாக்குவாதத்தை அடுத்து, இரண்டு பேருக்கும் இடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது....
Loading posts...
All posts loaded
No more posts
