Ad Widget

இரு நாள் டெங்கு ஒழிப்புத் திட்டம்!

மேல் மாகாணம் உட்பட டெங்கு பாதிப்புள்ள 7 மாவட்டங்களில் இரு நாள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்றுமுதல் (11) ஆரம்பமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, கேகாலை, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, குருணாகல, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் இன்று வரை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக சுகாதார அமைச்சு இந்நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் 29000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதுடன் அதில் 56பேர் உயிரிழந்துள்ளனர். 2016ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை 5000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய 54 வீதம் பாடசாலை சூழலிலும் கட்டிடங்கள் மற்றும் நிர்மாணிப்புப் பணிகள் நடக்கும் இடங்களில் 36வீதமும் சமய ஸ்தானங்களில் 40 வீதமும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் திணைக்களம், முப்படையினர், சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts