Ad Widget

முதன்முறையாக 9ஆவது தேசிய சாரணர் ஜம் போறி யாழ்ப்பாணத்தில்!

யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக 9ஆவது தேசிய சாரணர் ஜம் போறி எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இவ்வாறு தெரிவித்தார்.

scout-jambory-kurukula-raja-

யாழ்ப்பாணத்தின் சாரணியர் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெறுவதனை முன்னிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை சாரணியர் சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாணக் கல்வி அமைச்சின் அணுசரணையுடன் நடைபெறவுள்ளது.8000 ற்கும் மேற்பட்ட சாரணியர்கள் இந்தப் பாசறையில் பங்குபற்றவுள்ளனர்.

யாழ். மாநகர சபை வளாகத்தில் மற்றும் யாழ். கோட்டைப் பகுதி , யாழ். வேம்படி மகளிர் கல்லூரி , யாழ். மத்திய கல்லூரி ஆகிய இடங்களில் இந்தப் பாசறை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.அதேநேரம், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சாரணர் பாசறைக்காக 8 மில்லியன் ரூபா வடமாகாண சபை நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்தச் சாரணியர் பாசறை வடமாகாணத்தில் நடாத்தப்படுகின்றது.

இது வரலாற்றில் மிக முக்கியமான பாசறையாக இருக்கின்றது. வடமாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் சாரணியர்களாகப் பங்குபற்றும் இந்தப் பாசறை, யாழ். மத்திய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆகியன 200 ஆண்டுகளை இந்த 2016 ஆம் ஆண்டில் எட்டுகின்றன.

அந்த வகையில், இவ்வாறான ஒரு பாசறை நடாத்துவது, வடமாகாணக் கல்வி மேம்பாட்டிற்கு பெரும் வரப்பிரசாதம்.102ஆவது ஜம்போறி கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 103ஆவது ஐம்போறி நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டுகளில் 8 ஐம்போறிகள் நடாத்தியிருக்கின்றோம். இது 9ஆவது ஐம்போறி.

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சாரணிய மாணவர்கள் ஐம்போறிக்கு வருகை தருவார்கள்.

4 உப முகாம்கள் அமைத்து அங்கு சுமார் 2000 மாணவர்கள் தங்கவிடப்படவுள்ளனர்.

21 ஆம் திகதி ஆரம்பச் செயற்பாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

22 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை காலை 9.30 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை சாரணிய மாணவர்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

22 ஆம் திகதி சர்வதேச இரவு என சர்வதேச நாடுகளில் இருந்து வரும் சாரணிய மாணவர்கள் மற்றும் சாரணிய உத்தியோகத்தர்களுக்கான நிகழ்வுகள் இடம்பெறும்.

சர்வதேச நாடுகளில் இருந்து 150 பேர் வருகை தரவுள்ளனர்.

நேபாளம், மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து, பொங்கோடியா, ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரவள்ளனர்.

4 மலைகளின் பெயர்களை உள்ளிடக்கி இந்த ஐம்போறி நடைபெறவுள்ளது.

இந்த ஐம்போறியில், பொலிஸ் பாதுகாப்பு மற்றும் வைத்தியசாலை வசதிகள் உள்ளிட்டவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் துறைசார்ந்த அதிகாரிகள் ஐம்போறிக்கான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளதாகவும், தெரிவித்தனர்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில், வடமாகாணச் சாரணியர் சங்கப் பிரதி பணிப்பாளர் எம். எப். முகிப் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். ரவீந்திரன் மற்றும் சாரணிய அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Related Posts