- Saturday
- November 22nd, 2025
யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை, நேற்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனக்...
இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன என சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார். யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள்...
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறும் மாயையாகும் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் எப்போது நடைபெறும்...
புதிய தரவுகள் சேகரிப்பு என்பது தமது மீள்குடியேற்றத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான நடவடிக்கை என வலி.வடக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலி.வடக்கின் மீள்குடியேற்றம் புதிய தரவுகள் சேகரிக்கும் ஆரம்ப கட்டத்துடன் நிற்பது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தினை தந்துள்ளதாக அந்தமக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட...
புத்தூர் பிரதேசத்தில் பெண் தலைமையிலான குடும்பம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் நிதியத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. முதலமைச்சர் நிதியத்தினால் செய்துகொடுக்கப்படும் இரண்டாவது இல்லம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் 6 இலடசம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புத்தூர் பிரதேசத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் விஜயம்...
சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் தீர்வினை முன்வைப்பதற்கு நீர் வழங்கல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் இதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். கடந்தக்காலங்களில் இந்த பிரச்சினையினை ஒரு சிலர் அரசியல் சுயநலனின் அடிபடையில் கையாண்டமையே அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள்...
"எதிர்வரும் பெப்ரவர் மாதம் 4ஆம் திகதி - இலங்கையின் சுதந்திர தினத்தன்று எம்மை விடுவிக்காவிடின் சிறைச்சாலைகளில் எமது விடுதலைக்கான போராட்டம் தொடரும்." - இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு...
2015ஆம் ஆண்டு க.பொத உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 9 மாகாணங்களில் வட மாகாணம் முதலிடம் பெற்றுள்ளது. 25 மாவட்டங்களில் யாழ் மாவட்டமே முதலிடம் பெற்றுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (27) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற சமுர்தி 'சிப்தொர' புலமை பரிசில் வழங்கல் நிகழ்வில்...
யாழ். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் உண்டான திடீர் விரிசல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் நேற்றய தினம் அப்பகுதியில் இவ் ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேனா ஹெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மீள்குடியேற்றப்பட வேண்டிய இடங்கள்...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்துலதற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ஊடகவியலாளர் ரணில் விக்ரமசிங்கவிடம், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் விதுர கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் பெரியகல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் நேற்று அதிகாலை 12.10 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டு இருந்தார். கொடூர பாலியல் வன்புணர்வின் பின்னரே குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. முன்னதாக சிறுவனை தேடிச் சென்ற...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் இன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிணையில் விடுதலை செய்யப்பட்ட 39 அரசியல் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்நிலையில்...
வடக்கில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஜோன் ஸ்னோ வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்....
யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒரு பௌத்த கோயில் வேண்டும் என கோரி துண்டுப்பிரசுரங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. இது யாழ்.பல்கலைக்கழக பௌத்த மாணவர்கள் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர் காலத்தில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ள நிலையில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் இன்றைய தினம் அங்கு செல்லவுள்ளார். ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பயணமாகியுள்ள நிலையில், அவருடன் இணைந்து கொள்வதற்காகவே...
புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை தயாரிக்க வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார். இதுவரை காலமும் இயற்றப்பட்ட அரசியல்...
யாழ் பல்கலைகழகத்தில் 20.01.2016 நடைபெற்ற 31ஆவது பட்டமளிப்பு விழாவில் வவுனியாவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவியான செல்வி தணிகை சிவகுமார் (திருமதி.தணிகை சசிகாந்) சிறப்பு வைத்திமானி பட்டத்தை பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஐந்து துறைசார் தங்க பதங்கங்களை பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்ததை தண்டிக்கொண்ட தமிழ்...
ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில்...
Loading posts...
All posts loaded
No more posts
