Ad Widget

எமது நிலத்தை இராணுவம் கையகப்படுத்தி அனுபவிக்கின்றது! – வடக்கு முதல்வர்

எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி, அதனை அனுபவித்து வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த விவசாய பூமி. இங்குள்ள ஒவ்வொரு குழி நிலமும் விவசாயத்திற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்று இராணுவத்தினர் வசம் போய் முந்திரிகைத் தோட்டமாகவும், பழத்தோட்டங்களாகவும் காணப்படுகின்றன. அவற்றின் பயனை அவர்கள் அனுபவிக்கின்றார்கள்.

ஆனால், எம்மவரோ இருக்கின்ற நிலங்களைக் கூட சரியாகப் பயன்படுத்தாது பற்றைக் காடுகளாக படரவிட்டு விட்டுச் சோம்பிக் கிடக்கின்றார்கள். இந்நிலை மாற்றப்படல் வேண்டும் என்றார்.

Related Posts