- Saturday
- November 22nd, 2025
தனக்கு தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனமை வருத்தமளிப்பதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் மக்கள் ஆட்சி முறை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினை எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்படவில்லை....
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு, எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வைத்து வெளியிடப்படவுள்ளது. வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த தங்கவேல் செல்வராணி வீரைய்யா என்ற இப்பெண், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். அப்பெண்ணிடம் கடவுச்சீட்டோ அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களோ இல்லை. ஆகையால் அப்பெண்தொடர்பில் தகவல் தெரிந்தோர். 011 - 2259341, 011 - 2259954 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்குமாறு வெளிநாட்டு...
குடாநாட்டில் அண்மைய காலங்களாக பனைமரங்கள் உரிய அனுமதி பெறப்படாமல் தறிக்கப்படுவதால் பனைவளம் அழிவடையும் நிலை எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவிடயத்தில் வடக்கு மாகாணசபை அக்கறையற்று இருக்கின்றமை மிகுந்த வேதனையளிப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எனது அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபையினூடாகவே பனை...
தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு தொடர்பில் தீர்மானிக்கும் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களில் சுமார் நூற்றுக்கு 20 வீதமானவர்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உணவு தயாரிப்பு வேலைத்திட்டம்...
ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பிக்குகள் சிலர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், முழுமையான அறிக்கையை, மல்வத்து மற்றும் கோட்டை மஹாநாயக்க தேரர்களுக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்...
சர்வதேச வர்த்தக கண்காட்சி 2016 யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஜனவரி 31 வரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ தெரிவித்தார். சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ். கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை கண்காட்சி...
மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப புதிய கட்சியை உருவாக்க இது சிறந்த சந்தர்ப்பம் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஆர்.சம்பந்தன் இந்த அரசாங்கம் அமைய ஒத்துழைப்பு வழங்கியவர் என்பதால், அவரிடம் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மக்களின் எதிர்ப்புகள் தொடர்பான கருத்துக்களை பிரதிபலிக்க முடியாது எனவும்...
நாட்டில் இருக்கும் பிற்போக்கு சக்திகளுக்கு இடம்கொடுத்து அரசாங்கம் நல்லதொரு செயல்முறைக்கு முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது, அதனை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்துவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். "அரசியல் தீர்வு சம்பந்தமான எங்களது நிலைப்பாட்டை 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நாங்கள் முன்வைக்கையில், மக்கள் இதனை...
திருகோணமலை மாவட்டம் சம்பூரில் ஆறு வயது சிறுவனொருவனின் மர்ம மரணம் அந்தப் பகுதியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தன் பெற்றோருடன் மீளக் குடியேறியிருந்த குகதாஸ் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு மர்ம மரணமடைந்துள்ளான். இந்தச் சிறுவனின் சடலம் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் இன்று...
இலங்கை மக்கள் எப்போதும் எமது மனதிலும் இடம் பிடித்தவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கான உதவிகளையும் செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் . அதனால் இலங்கை நாடு எமக்கு அயல் நாடாக தெரியவில்லை. இது எங்களுடைய வீடாகக் காணப் படுகின்றது என யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஐன் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்திய நாட்டின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று...
ஆரோக்கியமற்ற உணவை சந்தைப்படுத்துவதை உலக அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிறார்கள் மோசமாக குண்டாவதைத் தடுக்க சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரிவிதிப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைப் பருவத்தில் உடல் பருமனாதலை குறைப்பதற்கான முக்கியத்துவம் குறித்த அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் இந்த பரிந்துரைகளை முன்...
காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை இன்னும் 12 மாதங்களினால் அரசாங்கம் நீடித்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு நாங்கள் நிச்சயம் தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம். அதற்கேற்றவகையில் தேவையான திட்டங்கள் எம்மிடம் உள்ளன என்று ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். நாங்கள் திருகோணமலையில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும்...
ஊழியர்கள் மற்றம் தொழிலாளர்கள் மத்தியில் தமது உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் Salary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விவரங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கியுள்ளதாக சர்வதேச தொழில் ஸ்தாபனம் (ILO) அறிவித்துள்ளது. இலங்கையின் தொழிலாளர் சட்ட விதிமுறைகள் பற்றிய தெளிவான விவரங்களை இந்த இணையத்தளம்...
நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது உணவு நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மரக்கறி, பச்சை மிளகாய், மீன், அரசி, யோகட், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, முட்டை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. எவ்வாறெனினும், பெரிய...
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டமொன்றை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 36 சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தார்.
அச்சுவேலி நவக்கிரிப் பகுதியில், கடந்த 23ஆம் திகதி அதிகாலை, நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு, 1.5 சதமமீற்றர் அகலத்துக்கு விகாரமடைந்துள்ளது. மேலும், புதிதாக சில இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வெடிப்பு ஏற்பட்ட பகுதி சற்றுக் கீழிறங்கியுள்ளது. இந்த வெடிப்பு சுண்ணாம்புப் பாறைகளின் விரிசல்கள் காரணமாக ஏற்பட்டது என்றும், நிலநடுக்கத்தால் ஏற்படவில்லையெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் யாழ் பல்கலைக்கழக...
ஈழத்தின் பிரபலமான பொப்பிசைப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியரும் பிரபல கால்பந்தாட்ட மத்தியஸ்தருமான எம்.எஸ் கமலநாதன், நேற்று (25) திங்கட்கிழமை வடமராட்சி, வதிரியில் காலமானார். புகழ்பெற்ற பல பாடல்களை எழுதி, இசையமைத்த கமலநாதன், பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு, இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் மிகவும் பிரபல்யமாயிருந்ததும் குறிப்படத்தக்கது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பாடசாலைப்...
ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் லண்டனுக்கு நேற்று திங்கட்கிழமை காலை பயணமாகியுள்ளார். நாட்டில் புதிய அரசமைப்புத் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் புதிய அரசமைப்புக்கு முன்வைப்பதற்கான யோசனைகளைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில்,...
இந்தியாவின் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளது போன்று, கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் இலங்கையின் தண்டனைச் சட்ட நடவடிக்கைக் கோவையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த முருகேசு சத்தியநாதன் என்பவரை உலக்கையால்...
Loading posts...
All posts loaded
No more posts
