Ad Widget

மனித உரிமைகள் ஆணையாளர் – த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

al-hasan-sambanthan

இந்தச் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றதாக கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்தச் சந்திப்பு தொடர்பில் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,

“திருப்திகரமான ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

மற்றும் நாட்டிலுள்ள தேசிய பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்களைப் பற்றியும் நாங்கள் பேசியிருக்கின்றோம்.

காணிகள் சம்பந்தமாகவும், கைதிகள் சம்பந்தமாகவும், காணாமற்போனோர் சம்பந்தமாகவும் அதேநேரத்தில் உண்மையான நல்லிணக்கம் விசுவாசமாக ஏற்படுவதாக இருந்தால், ஒரு நிரந்தரமான நியாயமாக அரசியல் தீர்வுக்கான அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம்.

மிகவும் திருப்திகரமான சந்திப்பு என்று நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்”. என்றார்.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

Related Posts