Ad Widget

60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்தம் வடமராட்சியில்!

60 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மஹோதயப் புண்ணியகால தீர்த்த உற்சவம் நேற்று அதிகாலை தொடக்கம் மாலை வரை தொண்டைமானாறு வரையான பாக்குநீரிணை வங்காள விரிகுடா கடலில் இடம்பெற்றது.

kadal thertham god

வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து சுவாமி எழுந்தருளி கடலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

சிம்மராசியில் குரு பகவானும் நிற்க, மகர மாதத்தில் திருவோண நட்சத்திரமும் அமாவாசை திதியும், விஜிதயோகமும் திங்கட்கிழமையும் ஒன்று சேர்ந்த உதயகாலம் மஹோதய புண்ணியகாலமாகும்.

இந்த நாள் 60 வருடங்களுக்கு ஒருமுறைதான் இடம்பெறும் நேற்று இதனை ஒட்டிய சமுத்திர தீர்த்தம் சிறப்பாக இடம்பெற்றது.

kadal thertham god 4

kadal thertham god 3

kadal thertham god 2

Related Posts