- Saturday
- November 22nd, 2025
தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு நேற்று (25) யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 8.45 மணியளவில் உடல்நல மேம்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் தேகாரோக்கியத்தினை மேம்படுத்தல் தொடர்பில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களினால் உரையாற்றப்பட்டதனைத் தொடர்ந்து பழைய பூங்காவில் மாவட்ட செயலக...
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் கிரிக்கெட் பயிற்சி முகாம் மற்றும் பட்டறை யாழ். மத்திய கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேசிய விளையாட்டு சுதந்திர விளையாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆளுமை விருத்திக்கான அறிவுரைகள், விளையாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்தல் மற்றும் மரதன் ஓட்டப் போட்டிகள் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த...
ஒமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போலியான விசாவை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் ஒமானில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது....
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணி தொடக்கம் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணாமல்...
சாவகச்சேரி, டச்சு வீதியில், இரவு வேளைகளில், கோடாரி, கத்திகளுடன் திரியும் 7 பேர் கொண்ட குழுவொன்று, வழிப்பறியில் ஈடுபடுவதுடன், அட்டகாசமும் செய்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை (24) இரவு, மேற்படி கும்பல் மேற்கொள்ளவிருந்த தாக்குதலில் இருந்து தப்பித்து சைக்கிளில் ஓடிய இளைஞர் ஒருவர், நிலை தடுமாறி வீழ்ந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்று வந்த நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு முன்பாக, இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில், கோப்பாப்புலவு பகுதியைச் சேர்ந்த மக்கள், இராணுவத்தினர் வசமுள்ள தங்கள் வயல் காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை, கொக்குத்தொடுவாயை பகுதி மக்கள், முல்லைத்தீவு...
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைக்கு அமைவாக வெளிநாட்டு நீதிபதிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
யாழ் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள (பலாலி) கப்பல்த்துறை முகத்தினை நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசணை தேவையாக உள்ளதாகவும் அதனுடாக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மிகவிரைவில் எடுக்கப்படும் எனவும் கப்பல், துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். வடக்கில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக எமக்கான கொள்கைத் திட்டங்களை அரசாங்கம் வழங்கியிருக்கின்றன. அவற்றை இன்றை தினம்...
குற்றவாளிகள் என தாங்கள் அடையாளம் காணப்பட்டால் தம்மை சாகும் வரை தூக்கிலிடுமாறு வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். வித்தியா கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இன்றைய தினம் சந்தேகநபர்கள் பத்து பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது தாம்...
தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான யோசனைகள் பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு -கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உபகுழுவின் உறுப்பினர் தெரிவித்தார். கடந்த ஒருமாத காலமாக...
தேசிய பாதுகாப்பு நலனுக்கு தேவைப்படும் காணிகள் எவையும் வடக்கில் விடுவிக்கப்படாது. அதற்குப் பதிலாக உரிமையாளர்களுக்கு மாற்று காணிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழு ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
சகோதரனுடன் கடலில் விளையாடிய சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தொடர்மாடி குருநகரைச் சேர்ந்த குருநகர் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்கும் ரூபன் அன்ரனி பேட் கீர்த்தனன் (வயது 10) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். தொடர்மாடி, குருநகரைச் சேர்ந்த...
வடக்கு இளைஞர் யுவதிகளின் பிரச்சினையாகவுள்ள தொழில் பிரச்சினைக்குத் தீர்வாக உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் பல புதிய முதலீட்டு வாய்ப்புகளை எதிர்காலத்தில் வட மாகாணத்தில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹைத்ரமணி ஆடைத்தொழிற்சாலையை நேற்று முற்பகல் திறந்துவைத்து உரையாற்றும்...
முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” என, குறிப்பிட்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என்...
புத்தூர் நவக்கிரி பிரதேசத்தில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட நிலவெடிப்பு, நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கமே என பேராதனை பல்கலைகழக புவியியல்துறை பேராசிரியர் வி. நந்தகுமார் தெரிவித்துள்ளார். நவக்கிரிப் பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டன. இதனையடுத்து, பேராதனை பல்கலைகழக புவியியல்துறை...
இலங்கையின் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் இருந்து பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா இந்த தகவலை, ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது மற்றும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது என்பன கடும் பிரயத்தனமாக இருக்கும் என்று...
தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டால், அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த்...
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச்...
இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி இடம்பெறும் சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களுடன் புலிகள் இயக்கத்தினருக்கோ, அல்லது புலி ஆதரவு அரசியல்வாதிகளுக்கோ தொடர்பிருக்கலாம் என, தமிழக க்யூ பிரிவு பொலிஸார் சந்தேகம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், கள்ளத் தோணி இயக்கும் கடத்தல்காரர்கள் பிடிபடும் போது, படகை விட்டு தப்பி விடுகின்றதுடன் நடுக்கடலில் தத்தளிப்போர், தங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts



