- Saturday
- November 22nd, 2025
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கவிஞரும், பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்து, வடமாகாண சபையின் பேரவைச் செயலகத்துக்கு இன்று சனிக்கிழமை (23) விஜயம் மேற்கொண்டார். அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், வடமாகாண சபையையும் சுற்றிப் பார்வையிட்டார்.
குடும்பத்தில் நிலவும் வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்தவரின் சடலமே வீட்டின் வறுமையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக்கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்....
யாழ். சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதி ஒருவருக்கு பாணுக்குள் கஞ்சா வைத்து கொடுக்க முற்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மானிப்பாய் - பூங்காவடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகநபர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் எனவும், 30 கிராம் கஞ்சாவினை ஒரு இறாத்தல் பாணுக்குள் வைத்து சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளார் எனவும்...
19வது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சில விடயங்களில் இலங்கை அண்மைக் காலங்களில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல் செய்தல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பிரதிநிதிகள் குழு, ஐரோப்பிய சங்கத்தின் நிர்வாகிகள், மனித உரிமைகள் தொடர்பிலான செயற்குழு உள்ளிட்டோருக்கு இடையிலான...
கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழா வரும் பெப்ரவரி மாதம் 20-ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தற்போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகி விட்டதால் கடந்த ஆண்டு நடைபெற்ற அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கை தூதரகத்தின் அனுமதி பெற்று தமிழகத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவில்...
ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதாக கூறிய 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு, இதுவரை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கப்படாத 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு பெப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் எனக்கோரி தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இளைஞனுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞன் முதலமைச்சர் மீது அவதூறு பேசாதீர்கள், முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட அனுமதியுங்கள் என்ற 4 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்திவரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வெள்ளிக்கிழமை (22) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் பெண் தலையில் படுகாயமடைந்தார். வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர். வெளியில் சென்ற...
பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவத்தினால் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்புக்களுடம் ஏற்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் மக்கள் ஆணையினைக் கேட்டுப் போட்டியிட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை வாக்குகளை கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், புதிய அரமைப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
முல்லைத்தீவில் நடக்கும் உழவர் விழாவில் பங்கேற்க வந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் வைரமுத்துவை சந்தித்துப் பேசினார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அழைப்பின்பேரில்கவிப்பேரரசு வைரமுத்து இலங்கை வந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த இவர் நேற்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். இதன்போது வைரமுத்து...
இலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடீஷ் கூறியுள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்படுத்தப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக, இலங்கையின் அபிவிருத்திக்காக புதிய சந்ததியினருக்கு தொழில்நுட்பத்தை...
2016ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறவுள்ள தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி...
சாவகச்சேரி சிவன் கோவில் பிரதேசத்தில் வசித்த 11 பேரை கடித்த விசர் நாய், இன்று வெள்ளிக்கிழமை இறந்துவிட்டது. இந்த விசர் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 11 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், நேற்று வியாழக்கிழமை (22) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேரையும் கடித்த நாய், இன்று வெள்ளிக்கிழமை (22) காலையில் இறந்துவிட்டதையடுத்து, அங்கு...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன், புதிய அரசியலமைப்பு, மக்களுக்கான தீர்வுத் திட்டம், காணாமல் போனோர் தொடர்பான...
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவமதிக்கும் செயலைக் கண்டித்து, தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக வரணி இளைஞர் ஒருவர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு வலியுறுத்தியதுடன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வரணி இளைஞர் ஒருவர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வரணிப் பகுதியைச்...
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் காணிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில், அந்நிகழ்வு திடீரென மறு அறிவித்தல் வரும்வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளினால் உரிய மக்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து தலைநகர் டாவோஸ் நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உள்ளூர்,...
காணாமல் போனோர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து அந்த பிரச்சினைக்கான தீர்வாகாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக காணாமற்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடப்பட்ட போது, கருத்து வெளியிட்ட பெண் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர்...
தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கை...
Loading posts...
All posts loaded
No more posts
