Ad Widget

சுத்திரிப்புப் பணியை நாங்கள் செய்யமாட்டோம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவரும் சுகாதார உதவியாளர்களை சுத்திரிப்புப் பணியிலும் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளளது.

நோயாளர்களுடன் நெருங்கிப் பழகும் தாங்கள், சுத்திகரிப்புப் பணியையும் மேற்கொண்டு நோயாளர்களையும் கவனிக்க முடியாது என சுகாதார உதவியாளர்கள் கூறினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திரிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் போதாமல் உள்ளமையால், சுகாதார உதவியாளர்களும் அவர்களுக்கு துணையாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்தந்த விடுதியில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் தங்கள் விடுதிகளை சுத்திரிகரிப்பை மேற்கொள்ளுமாறு தெரிவித்து, வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தியால் விடுதிகளின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும், இலங்கையிலுள்ள வேறு வைத்தியசாலையிலும் இவ்வாறு நடைமுறை இல்லையெனவும் சுகாதார உதவியாளர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான செயற்பாட்டை முன்னைய பணிப்பாளரும் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு, பின்னர் கலந்துரையாடல்கள் மூலம் நிறுத்தப்பட்டதாக உதவியாளர்கள் கூறினர்.

இது தொடர்பில் பணிப்பாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், சந்திப்புக்காக இன்னமும் தங்களுக்கு நேர ஒதுக்கீடு செய்து தரப்படவில்லையெனவும் உதவியாளர்கள் மேலும் கூறினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுத்திரிப்புப் பணி, 2006ஆம் ஆண்டு முதல் தனியார் சுத்திரிகரிப்பு நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, இன்று வரையில் அந்த நிறுவனத்தால் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts