Ad Widget

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தில் நடைபெற்றது.

அந்த கலந்துரையாடலில், காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைனை சந்திப்பதற்கு ஐக்கிய நாடுகள் வதிவிட காரியாலயத்திடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்றும், இனியும் தம்மை ஏமாற்ற வேண்டாமென்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

missing-mother-2

missing-kajentheran-pathmini-1

missing-mother-1

Related Posts