Ad Widget

வி்த்தியா கொலை வழக்கு: சிக்கலில் ஊடகவியலாளர்

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் செய்தியாளரே நாளை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் முதல் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானாக வை.எம்.எல்.ரியால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரதணை முடிவுற்றதும். நீதிமன்ற கட்டடத் தொகுதியினை விட்டு வெளியேறி சிறைச்சாலை வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களை அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்கள் ‘தாம் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், வித்தியாவின் இறுதிக் கிரியைக்கு வந்த போது எந்தவிதமான காரணங்களும் இல்லாமல் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கோபி என்று அழைக்கப்படும் பொலிஸ் அதிகாரி எங்களை கைது செய்தார்’ என்று தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு தெரிவித்த சந்தேக நபர்கள் ‘வெளியில் வந்தால் கோபியை (பொலிஸ் அதிகாரியை) கொலை செய்துவிட்டு மீண்டும் இதே சிறைக்குச் செல்வோம்’ என்றனர்.

இவ்வாறு பொலிஸாருக்கு சந்தேக நபர்களினால் விடப்பட் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் தனது ஊடகத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் விசாரணையினை ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக குறித்த செய்தியை வெளியிட்ட ஊடகவிலாளரை விசாரணைக்கா ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்வழைப்பினை குறித்த பத்திரிகை அலுவலகத்திற்கு நேரில் சென்ற பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts