குடாக்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை?

யாழ்ப்பாணத்தின் குடாக்கடல் பகுதியில் தொழில் செய்வதற்கு 45 நாட்கள் தடை விதித்து, மீனின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடாமல் இருக்கும் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

தீவுப் பகுதியிலிருந்து பண்ணைப் பகுதி வரையிலும் அதிகளவான கலங்கட்டிகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கலங்கட்டிகளால் மீன்களின் இனப்பெருக்கமான பாதிக்கப்படுகின்றது. அந்த கலங்கட்டிகளைத் தாண்டியே காக்கைதீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன்கள் வரவேண்டியுள்ளது.

அத்துடன், குடாக்கடலில் மீன்களின் படுகைகளும் குறைந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு, மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான விடயங்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Posts