Ad Widget

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

prot-nort-teachers-thondar-asireyar

கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்த பின்னர் 700 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்திருந்தும், இன்று வரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

தங்களின் நியமனங்கள் பிற்போடுவதற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் அரசியல் ரீதியில் செல்வாக்குப் பெற்றவர்கள் நியமனங்களைப் பெற்றுள்ளதாகவும் தடுப்பில் இருந்து விடுதலையானவர்களும் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டடினர்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

Related Posts