Ad Widget

27, 28, 29ஆம் திகதிகளில் யாழில் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வு!

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு யாழ்.குடாநாட்டில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச தெரிவித்துள்ளார்.

கோப்பாய், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், யாழ் குடாநாட்டில் கடந்த அமர்வில் கலந்துகொள்ளாத வடமராட்சி கிழக்குப் பிரதேச மக்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார.

யாழ். குடாநாட்டிலிருந்து கிடைத்துள்ள 12 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிப்பது குறித்து ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts