Ad Widget

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் விரத காலம் தொடங்கியது

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி வருகிறது. அதற்கு முன்னதாக வரும் 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக(விரதம்) கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் புதன்கிழமை அன்று தவக்காலம் தொடங்கும் என்பதால், அந்த புதன்கிழமையை சாம்பல் புதனாக அழைக்கிறார்கள். தவக்காலம் தொடங்கியதால் கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. தினமும் காலையிலும், மாலையிலும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அடுத்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி ஏசு பிரான், சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

Related Posts