- Friday
- August 7th, 2026
தகவல் அறியும் சட்டமூலம் பிரிவு பிரிவாக விவாதித்து பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் சிலரின் பரிந்துரைகளுடன் தகவல் அறியும் சட்டமூலத்தை வடமாகாண சபை ஏற்றுக்கொண்டது. தேநீர் இடைவேளை வரை, தகவல் அறியும் சட்டமூலத்தைப் பற்றி தனித்தனியாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும். இதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அமர்வுகள் தேவைப்படும்...
மைதானங்களில் வைத்து பலர் பிடிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமற்போனமை தொடர்பில் தகவல் இல்லை. கேட்டால் தேசிய பாதுகாப்பு என்கின்றனர். இராணுவத்தினரின் குற்றங்களை மறைப்பது தேசிய பாதுகாப்பா?' என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினர். இங்கு...
நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். “விரைவில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என வடமாகாண சுகாதார அமைச்சு உறுதிக் கடிதத்தை வழங்கவேண்டும் என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களும் தெரிவித்தனர். தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி மேற்படி தொண்டர்கள், பண்ணையில் அமைந்துள்ள...
கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான அமரர் வி.வீரசிங்கம் அவர்களின் நினைவாக மே மாதத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட இருப்பதாகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானித்துள்ளனர். கூட்டுறவு அமைச்சால்...
காரைநகர் பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊர்காவற்துறை ஏலாரை இராணுவ முகாமில் பணியாற்றிய 26 வயதான இராணுவ சிபாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இராணுவ சிப்பாய் கொகரெல்ல-கொட்டுஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்சமயம் இவரது சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்...
யாழ். புனித சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான ‘வடக்கின் சமர்’ என்றழைக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் 110ஆவது அத்தியாயம் இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. குறித்த சமரை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கப்பல்கள் மற்றும் துறைமுக அமைச்சரான அர்ஜீன...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் எனக்கூறும் அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எந்தத் தகவலையும் இதுவரையும் வெளியிடவில்லை' என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது....
சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறினாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் அவை இல்லை என்பதே உண்மை. பல சட்ட, ஒழுங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் வடமாகாண சுகாதார அமைச்சின்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், அவர்களது உண்ணாவிரதப் பேராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 8.10 அளவில் ஆரம்பமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ன. இதற்கமைய கிளிநொச்சி திரேசம்மா தேவாலயத்தில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, நகர் பிள்ளையார் கோவில்...
இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேரூந்து சாரதி ஒருவர் குறித்த பேரூந்தில் பயணித்த மாணவிகளை தகாத வார்த்தையினால் திட்டியதுடன், மாணவி ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரியவருகின்றது. வவுனியாவில் இருந்து நேற்று புதன் கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் நேக்கி பயணித்த குறித்த பேரூந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மாணவி தனது பயணத்தை...
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பின் வடமேற்குப் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார். தமிழகம் - புதுக்கோட்டையைச் சேர்ந்த இந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்திய ரோலர் படகொன்றையும் கடற்படையினர்...
கீரிமலை பகுதியில் காணி சுவீகரிப்பிற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் யாழ். திருவடிநிலை பகுதியில் காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – திருவடிநிலை பகுதியில் இந்த நடவடிக்கை...
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர் வெற்றிடங்களை உயர்கல்வி அமைச்சால் அனுப்பப்பட்டுள்ள பட்டியலிலிருந்து நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது. ப.மா.ஆ.சுற்றுநிருபம் 876 (06.06.2006) இன் பிரகாரம் தமது செயல் ஏற்புடையதேயென யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் காரணம் கூறுகின்ற போதிலும் இப்பட்டியல் நியமனம் நல்லாட்சி அரசாங்கமும் உயர்கல்வி அமைச்சை முன்னைய அரசாங்கம்...
'வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் உள்ள முப்படைகளினதும் முகாம்களை 2016ஆம் ஆண்டில் அகற்றுவது தொடர்பில் சரியான பதிலொன்றை வழங்க முடியாது' என்று பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (09) அறிவித்தது. நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, 'வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முகாம்களை இவ்வாண்டில் அகற்றுவது தொடர்பில் முடிவேதும் இருக்கின்றதா?'...
"வடக்கில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைகள், மதுபோதை பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் முதலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது'' என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை, மாலை, இரவு பொலிஸ் ரோந்து சேவைகள், உடனடி வீதித் தடைகள், உடனடி சுற்றிவளைப்புகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்துப்...
யாழ் காக்கைதீவு கடற்கரைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ் விசேட பொஸிசார் தெரிவிக்கின்றனர். கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் தொழிலுக்கு சென்று கொண்டிருந்து போது நேற்று மாலை 04.00 மணியளவில் இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணையினை பொஸிசார் மேற்கொண்டு வருகின்றனர். இக் கைக்குண்டு வெடிக்கப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
யாழ் மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களின் தரம் பரீட்சிக்கும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போது இச்சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், வேன்கள், பஸ் வண்டிகள் மோட்டார் திணைக்கள அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டன. இப்பரிசோதனையின் போது யாழ் போக்குவரத்து பொலிசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்துடன் பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்கள் உரிய...
இலங்கையில் நடந்த போரின் போது, புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் பொதுமக்களுக்கு உரியதை, அவர்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரின்போது, போர் வலயப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட நகைகள் குறித்து, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் 30,000 ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு இலட்சம் ரூபா நஸ்டயீட்டை செலுத்த வேண்டும் எனவும் இதன்போது...
Loading posts...
All posts loaded
No more posts
