இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்...

வந்தடைந்தார் செயிட் அல் ஹூசைன்

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல்...
Ad Widget

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு கடும் நடவடிக்கை! – அரசாங்க அதிபர்

யாழ்.குடாநாட்டில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை...

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை முன்கூட்டிய அனுமதி இல்லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சுத்திரிப்புப் பணியை நாங்கள் செய்யமாட்டோம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவரும் சுகாதார உதவியாளர்களை சுத்திரிப்புப் பணியிலும் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளளது. நோயாளர்களுடன் நெருங்கிப் பழகும் தாங்கள், சுத்திகரிப்புப் பணியையும் மேற்கொண்டு நோயாளர்களையும் கவனிக்க முடியாது என சுகாதார உதவியாளர்கள் கூறினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திரிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் போதாமல் உள்ளமையால், சுகாதார உதவியாளர்களும் அவர்களுக்கு துணையாக...

சுஷ்மாவுக்கு ரணில் அமோக வரவேற்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டார். இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது இந்திய...

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் வருகை இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் (Zeid Ra'ad Al Hussein) இன்று (06) இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது. இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ள இவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையான சுமார் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான...

சிறுநீரக கடத்தல் சம்பந்தமான அறிக்கை அமைச்சர் ராஜிதவிடம் ஒப்படைக்கப்பட்டது

இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை நேற்று (05) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் கடந்த 23ம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் வைத்தியசாலைகள் உள்ளிட்ட இடங்களில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். முன்னதாக 03 தினங்களில் அந்த...

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சந்தோசம்- வடமாகாண முதலமைச்சர்

நேற்று நடந்த சம்பவம் மகிழ்ச்சி தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சந்தோசம் சிறிய விடயமாக இருந்தாலும் சிங்கள தமிழ் சகோதரத்துவத்தில் வேறுபாடுகளுக்குள்ளும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது சிங்கள சகோதரர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் பத்து அடி எடுத்து வைக்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  இன்று(5)  பௌத்த விகாரையில் வழிபாடுகளை...

இந்தியாவில் கல்விகற்கும் இலங்கை மாணவர்கள் அச்சத்தில்!!!

பெங்களூர் ஹேசரகாடாவில் தான்சானிய நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து இலங்கை மாணவர்கள் மத்தியிலும் தாக்குதல் அச்சம் தோன்றியுள்ளது. இந்த செய்தியை த ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் ஏனைய வெளிநாட்டு மாணவர்களும் ஹேசரகாடாவில் தங்கி கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தன்சானியா நாட்டு மாணவர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டமையை...

இதுவா பச்சைப் பிள்ளை? அப்படியானால் 12 வயது பிரபாகரனின் மகன் ???

ஒரு குழந்தையைக் கைது செய்து அக்குழந்தையின் தந்தைக்கு சிக்கலைக் கொடுக்கும் பழிவாங்கும் அரசியல் என்று ராஜபக்சேவின் மகன் யோசித ராஜபக்சேவைக் கைது செய்ததை விமர்சித்துள்ளார் கோத்தபயா ராஜபக்சே. ஆனால் அவர் போட்ட இந்த டிவிட்டுக்கு பலரும் கடுமையாக பதில் டிவிட் போட்டு கோத்தபயாவை கலங்கடித்து வருகின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் பாரபட்சமே இல்லாமல் கோத்தபயாவை அவரது டிவிட்டுக்குப்...

விபத்தில் வலிகாமம் வடக்கு தவிசாளர் படுகாயம்

தாவடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்ற விபத்தில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னால் சென்ற வான் ஒன்று திடீரென நிறுத்தப்பட்டபோது, இவரது மோட்டார் சைக்கிள் வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடாக்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை?

யாழ்ப்பாணத்தின் குடாக்கடல் பகுதியில் தொழில் செய்வதற்கு 45 நாட்கள் தடை விதித்து, மீனின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடாமல் இருக்கும் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. தீவுப் பகுதியிலிருந்து பண்ணைப் பகுதி வரையிலும் அதிகளவான கலங்கட்டிகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கலங்கட்டிகளால் மீன்களின் இனப்பெருக்கமான...

சம்பந்தனுக்கு உதவிய பிரேமதாசவின் பாரியார்!

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச உதவியுள்ளார். 68வது தேசிய சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வந்த போது, அதில்...

வி்த்தியா கொலை வழக்கு: சிக்கலில் ஊடகவியலாளர்

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் செய்தியாளரே நாளை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானாக வை.எம்.எல்.ரியால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த...

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது பெரிய விடயமல்ல!- சம்பந்தன்

சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை பெரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டியதொன்றுமல்ல. ஏனெனில் தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர தினத்தில் தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்றே. இது பெரிதான விடயமல்ல. இதனை மீள நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கத்திற்கும் நன்மையாகும். அதே போன்று...

புகையிலைச் செய்கைக்கு விரைவில் தடை!

புகையிலை செய்கையை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வர்த்தக விவசாய செய்கையாக புகையிலையை பயிரிடுவதைத் தவிர்த்து, உணவுப் பொருட்கள் பயிரிடப்படும் என அவர்...

சம்பந்தன் ஆனந்தக் கண்ணீர்!

தேசிய வைபவம் காலிமுகத்திடல் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த வைபவ நிறைவின்போது, தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட்டது. வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார். தேசிய கீதம், தமிழ்மொழியில் பாடப்பட்டபோது அவரின், கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக, இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின்...

வடக்கின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளார். தனக்கு இவ்வாறானதொரு பதவி கிடைக்கவுள்ளது என அறியக் கிடைத்தது என்று ரெஜினோல்ட் குரேயே உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். ஆளுநர் பதவியில் இருந்து விலகிக்கொள்வது குறித்து அவர்...
Loading posts...

All posts loaded

No more posts